சமூக ஊடகங்களில், ஒரு பயனர் மூன்று பாம்புகளின் புகைப்படத்தைப் பகிர்ந்தார். அந்த புகைப்படத்தில், பாம்புகள் கோபமாக உள்ளதை போல் இருந்தது. அதே நேரத்தில் உண்மை நேர்மாறாக இருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஷப் பாம்புகள் இல்லை, வைரல் போட்டோவில் அப்பாவி சிறிய பூச்சி மறைந்துள்ளது, அதன் இறக்கைகள் கோபமாக உள்ள பாம்புகளைப் போல இருக்கிறது என்பது தான் உண்மை நிலை. கீழே உள்ள ட்விட்டர் பதிவில், நீங்கள் அந்த பூச்சியின் முழுமையான வடிவத்தை காணலாம்.



Attacus Atlas அல்லது அட்லஸ் அந்துப்பூச்சி (Atlas Moth) என்றும் அழைக்கப்படுகிறது, இது லெபிடோப்டெரா (Lepidoptera) இனத்தின் மிகப்பெரிய பூச்சி ஆகும். லெபிடோப்டெரா இனங்களில் பட்டாம்பூச்சிகள் மற்றும் பூச்சிகள் அடங்கும். படங்களை பகிர்ந்துள்ள பதிவர் 'அட்டகஸ் அட்லஸ்’ (Attacus Atlas)  உலகின் மிகப்பெரிய பட்டாம்பூச்சிகளில் ஒன்றாகும். இது இரண்டு வாரங்கள் மட்டுமே வாழ்கிறது.


ALSO READ | Viral Video: அழகிய தோகைகளை விரித்து ஆடும் ஆண் மயில்; ‘NO’ சொன்ன பெண் மயில் ..!!


அட்லஸ் அந்துப்பூச்சி, வயது முதிர்ந்த பிறகு முட்டையிடுவதையும், அவற்றைப் பாதுகாப்பதையும் தனது ஒரே குறிக்கோளாக கொண்டுள்ளது என அந்த பதிவர் குறிப்பிட்டுள்ளார். வேட்டையாடுபவர்களை பயமுறுத்த தனது இறகுககளை பயன்படுத்துகிறது. 


வைரலாகிய இந்த ட்விட்டர் பதிவில், பலர் தங்கள் கண்களை நம்ப முடியவில்லை எனக் கூறியுள்ளனர்.  அது எப்படி பாம்பு போல் இருக்கிறது என்று ஆச்சரியப்பட்டனர். தேசிய வரலாற்று அருங்காட்சியகம்,  இந்த பூச்சி குறித்து கூறும் போது, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது, ​​அது அதன் சிறகுகளை விரித்து, பாம்பின் தலை போல், வேட்டையாடுபவர்களை பயமுறுத்துகிறது என கூறியுள்ளது.


இந்த பூச்சி பெரும்பாலும் ஆசியாவில் காணப்படுகிறது. மிகப்பெரிய பூச்சியான அட்டகஸ் அட்லஸ் 2012 இல் முதன்முதலில் இங்கிலாந்தில் காணப்பட்டது. அது கிரேட்டர் மான்செஸ்டரின் ராம்ஸ்பாட்டமில் உள்ள ஒரு ஜன்னலில் கண்டுபிடிக்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன


ALSO READ | ’வனவாசமே சுகவாசம்’: 17 ஆண்டுகளாக காட்டில் வசிக்கும் அபூர்வ மனிதர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR