‘தடாசனா’ எப்படி செய்வது? என ஒளி மற்றும் ஒலி வடிவில் விளக்கும் வீடியோ ஒன்றினை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் விதமாக சர்வதேச யோகா தினம், ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடி ஐ.நா. பொதுச்சபையில் கடந்த 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தினார்.


இதையடுத்து ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அமெரிக்கா, கனடா, சீனா உட்பட பல உலக நாடுகள் மோடியின் பரிந்துரையை ஆதரித்தன. இதையடுத்து ஐ.நா ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவித்துள்ளது.



இந்நிலையில் சர்வதேச யோகா தினம் எதிர்வரும் நிலையில் பிரதமர் மோடி அவ்வப்போது யோகாசன பயிற்சி வீடியோக்களை பகிர்ந்து வருகின்றார். அந்த வகையில் நேற்று திரிகோண ஆசனம் எனும் யோகா பயிற்சியினை தான்மேற்கொள்வது போல் கார்டூன் வீடியோவை வெளியிட்டார். இன்று தடாசனம் என்ற யோகாசனத்தை கார்டூன் வடிவில் மீண்டும் தான் யோகா செய்வதை போல் வெளியிட்டுள்ளார். 


இந்த வீடியோ வெளியிட்டதுடன், ‘தடாசனத்தை முறையாக செய்யப்பழகினால் மற்ற யோகாசனங்களை மிக சுலபமாக செய்ய முடியும். இந்த ஆசனம் குறித்த விவரங்களை வீடியோ மூலம் அறிந்து கொள்க’ என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.