மும்பை: ரயில்வே தண்டவாளத்தின் நடுவில் நின்றுகொண்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு போலீஸ்காரர் காப்பாற்றினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரயில்வே தண்டவாளத்தின் நடுவில் நின்றுகொண்டிருந்த ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு போலீஸ்காரர் காப்பாற்றினார். இந்த சம்பவம் சனிக்கிழமையன்று (செப்டம்பர் 11ம் தேதி) நிகழ்ந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


காலை 10 மணியளவில் வசாய் சாலை ரயில் நிலையத்திற்கு தஹனு-அந்தேரி உள்ளூர் ரயில் (Dahanu-Andheri local train) நெருங்கியபோது, ரோந்துப் பணியில் இருந்த போலீஸ்காரர் ஏக்நாத் நாயக் ரயில் தண்டவாளத்தின் நடுவில் பெண் ஒருவர் நிற்பதைப் பார்த்தார்.


ALSO READ | Work From Home பரிதாபங்கள்; கணவர் ஆபீஸ் வர அனுமதியுங்கள் என கெஞ்சும் மனைவி..!!


அந்தப் பெண்ணைக் கண்டவுடன், நாயக் உடனடியாக ரயிலை நிறுத்துமாறு மோட்டார் வாகனத்தில் சமிக்ஞை கொடுக்கத் தொடங்கினார். அந்த பெண்ணின் அருகில் வந்த பிறகுதான், ரயில் நின்றதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


வீடியோவை இங்கே பார்க்கவும்:



ரயில்வே மேம்பாலத்தின் மீது நின்ற போலீஸ்காரர்கள் சிலரையும் நாயக் எச்சரித்தார். அதேபோல், இரண்டு ரயில்வே பாதுகாப்பு படை (Railway Protection Force) காவலர்களும், நாயக்கிற்கு உதவி செய்ய விரைந்ததாக பிடிஐ தெரிவித்துள்ளது.


அந்த பெண் வசாயில் தனியாக வசிக்கும் சுபத்ரா ஷிண்டே என்ற "மனநிலை பாதிக்கப்பட்டவர்" என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.  


அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவதற்காக நாயக் செய்த முயற்சிகளை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டினர். அதேபோல் ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததற்காக தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக நாயக் (Naik) தெரிவித்தார். தனக்கு உதவி செய்த சகாக்களுக்கும் ஆர்.பி.எஃப் பணியாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.


ALSO READ | செக்ஸ் பற்றி நியூசிலாந்து பிரதமர் அளித்த சுவாரஸ்யமான பதில்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR