ஹைதராபாத்: உலகில் ஒரு சிலரிடம் மட்டுமே லம்போர்கினி அவென்டடோர் ரோட்ஸ்டர் ( Lamborghini Aventador Roadster) கார் உள்ளது. இதுவொரு பிரீமியம் சொகுசு கார். 6 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி கார் வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலில் இப்போது தென்னிந்திய சூப்பர் ஸ்டார் பிரபாஸ் இணைந்துவிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகுபலி (Baahubali) புகழ் நடிகர் சமீபத்தில் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்வாங்கி (swanky) காரை வாங்கியுள்ளார்.



தெலுங்கு திரையுலகின் பிரபல நட்சத்திரம் தனது புதிய விலைமதிப்பற்ற காரில் பயணிக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெறித்தனமாக பகிரப்படுகின்றன. அவர் தனது தந்தை சூர்யா நாராயண ராஜூவின் பிறந்த நாளில் இந்த காரை வாங்கியதாக கூறப்படுகிறது. 



பிரபாஸ் தனது அட்டகாசமான ஆரஞ்சு நிற ஸ்வாங்கி காரை ஓட்டும்  புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. காரின் படங்களை இங்கே பார்க்கலாம்:



இரவில் ஹைதராபாத் சாலைகளில் நடிகர் பிரபாஸ் தனது முதல் லம்போர்கினி டிரைவ் அனுபவிக்கும் வீடியோவும் உள்ளது.  


Also Read | பிஜேபி வேட்பாளர் குஷ்பு சுந்தருடன் சிறப்பு நேர்காணல்


இதற்கிடையில், நடிகரின் ரசிகர் மன்றங்கள் தங்களுக்கு பிடித்த நட்சத்திரத்தின் பல்வேறு புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து கொள்கின்றனர்.


இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான பிரபாஸ், ஒரு படத்திற்கு 75 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிஎம்டபிள்யூ 520 டி, இன்னோவா கிறிஸ்டா, ஜாகுவார் எக்ஸ்ஜேஎல் மற்றும் ரேஞ்ச் ரோவர் வோக் (BMW 520D, Innova Christa, Jaguar XJL and Range Rover Vogue) போன்ற சொகுசு கார்களை வைத்திருக்கிறார் பிரபாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.



பான்-இந்தியா நட்சத்திரம் லம்போர்கினி கார் வாங்கப் போவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். குறிப்பாக, லம்போர்கினி மாடல் இந்திய பிரபலங்களிடையே மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாகும்.


 ஓம் ரவுத் இயக்கும் 3 டி படமான ஆதிபுருஷின் படப்பிடிப்பில் பிரபாஸ் தற்போது பிஸியாக இருக்கிறார். தவிர, கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீலுடன் சலார் மற்றும் இயக்குனர் நாக் அஸ்வின் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோருடன் மற்றொரு திரைப்படத்திலும் பிரபாஸ் பணியாற்றி வருகிறார்.  


Also Read | 2021 இல் 40 புதிய அனிமேஷன் சீரியல்களை Netflix அறிமுகப்படுத்தும்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR