பிரதமர் மோடி அவர்களின் Youtube சேனல் 1 மில்லியன் follower-களை எட்டியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்வதேச அரசியலில் பிரகாச ஒளியினை ஏற்படுத்தி வரும் பிரதமர் மோடி அவர்கள் சமூக வலைதளங்களில் எப்போதும் விழிப்புடன் இருப்பவர். இதனால் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடியினை பின்தொடர்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.


இந்நிலையில் தற்போது அவரது Youtube சேனலினை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை தாண்டியுள்ளது. தற்போது 1,004,251 பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள மோடியின் Youtube சேனல் இதுவரை 4.3 மில்லியன் மாதாந்திர சராசரி காட்சி நேரத்தினை பெற்றுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


பிரதமர் மோடி அவர்கள் தொடர்ந்து தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் வீடியோக்களையும், மாதாந்திரம் தான் வானொலியில் வழங்கி வரும் மான்-கி-பாத் நிகழ்ச்சியின் வீடியோக்களையும் அவரது சேனலில் பதிவேற்றி வருகின்றார். இதன் காராணமாக கடந்த அக்டோபர் 26, 2007 அன்று தொடங்கப்பட்ட இந்த சேனலில் இதுவரை 134,092,745 பார்வையாளர்கள் வீடியோக்களை கண்டுகளித்துள்ளனர்.



உலக தலைவர்களின் Youtube சேனல்களை பொறுத்தவரையில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் Youtube சேனல் 1.8 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்டுள்ளது. தற்போது 1 மில்லியன் தொடர்பாளர்களை எட்டியுள்ள பிரதமர் மோடியின் Youtube சேனல் விரைவில் வெள்ளை மாளிகை சேனலை மிஞ்சி உலக தலைவர்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக twitter பக்கத்தில் அதிக பின் தொடர்பாளர்களை கொண்டுள்ள தலைவரகளின் பட்டியலில் பிரதமர் மோடியின் பெயர் இடம்பெற்று சாதனை படைத்தது. தற்போது 43.3 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ள இந்த twitter கணக்கு தொடர்ந்து எண்ணிக்கை சாதனை புரிந்து வரும் நிலையில் தற்போது அவரது Youtube சேனலும் சாதனை புரிய துவங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.