Video: ஆள விட்ட போதும்டா சாமி... தலைதெறிக்க ஓடும் காவல்துறை!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ரயில் விபத்தில் நியாயம் கோரி அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த காவல்துறையினரை போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்கி வருகின்றனர்!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ரயில் விபத்தில் நியாயம் கோரி அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த காவல்துறையினரை போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்கி வருகின்றனர்!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரின் ஜோரா பஜார் என்ற இடத்தில் தசரா விழா கொடாட்டம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அங்குள்ள தண்டவாளத்தின் அருகே உள்ள மைதானத்தில் ராவணன் உருவ பொம்மையை எரித்து பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டினர். இதனை காண தண்டவாளத்தின் இரு பக்கத்திலும் உள்ள காலி இடத்தில் ஏராளமானவர்கள் கூடி இருந்தனர்.
அப்போது அந்த வழியாக நகோடரில் இருந்து அமிர்தசரஸ் வழியாக ஜலந்தர் செல்லும் ரயில் பயணித்தது. ராவணன் உருவ பொம்மை எரிந்த போது பட்டாசுகள் வெடித்த ஒலியால் ரயிலின் சத்தம் கேட்காத நிலையில், தண்டவாளத்தில் நின்றிருந்த பொதுமக்கள் மீது ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 61 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக ரயிலை இயக்கிய ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கவனக்குறைவாக செயல்பட்ட அரசுஅதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைப்பெற்று வரும் இப்போராட்டதினை கட்டுக்கள் கொண்டுவர பஞ்சாப் காவல்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுப்படும் பொதுமக்கள், காவல்துறையினரின் மீது கல் எறிந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.