கோழி முட்டையை அடைகாக்கும் நாய்க்குட்டி! வேடிக்கை பார்க்கும் கோழி; வீடியோ
கோழி முட்டையை அடைகாக்கும் நாய்க்குட்டியின் கியூட் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
கோழி ஒன்று முட்டையிட்டு அதனை அடைகாக்கும்போது, அதனுடன் குட்டி நாய்க்குட்டி ஒன்றும் சேர்ந்து அடைகாக்க அமர்வது காண்போரை ரசிக்கவும், வியக்கவும் வைக்கிறது. இன்ஸ்டாகிராமில் வெளியாகியிருக்கும் கோழி மற்றும் கியூட்டான நாய்க்குட்டியின் இந்த வீடியோ பல ஆயிரம் பேரால் ரசிக்கப்பட்டு இணையத்திலும் வைரலாகியிருக்கிறது.
மேலும் படிக்க | Dangerous Kiss: முத்தத்தில் எத்தனை வகை இருந்தாலும் இந்த கிஸ் கொஞ்சம் டேஞ்சர் தான்
joysafaribay என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் இந்த வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது. அதில், முட்டையிட்டிருக்கும் கோழி தனது முட்டைகளுடன் அடைகாக்க அமர்ந்திருக்கிறது. அப்போது, அங்கு வரும் கியூட்டான வெள்ளை நிறத்தினாலான நாய்க்குட்டி, கோழிக்கு அருகில் சென்று முத்தம் இட்டு அன்பை பரிமாறிக் கொள்கிறது. கோழியும் நாயின் முத்தத்தை வாஞ்சையுடன் ஏற்றுக் கொண்டு, அமைதியாக அதனை பார்க்கிறது. அங்கும் இங்கும் சென்று விளையாடும் குட்டி நாய், ஒருகட்டத்தில் அடைகாக்கும் கோழியுடன் சென்று அதன் முட்டைகளையும் அடைகாக்கிறது.
கோழியும், நாய்க்குட்டி அடைகாக்க அமர்வதற்கான இடத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறது. இந்த கியூட் வீடியோவை இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர். கோழிக்கும் நாய்க்கும் இடையில் இருப்பது அன்பைத் தவிர வேறென்ன? என கேட்டுள்ள நெட்டிசன்கள், அன்பு மட்டுமே யுனிவர்சல் மொழி என பெருமிதத்தோடு கூறியுள்ளனர்.
மேலும் படிக்க | பாம்பு வாங்கிய பல்பு, மாஸ் காட்டிய குழந்தை: திகிலூட்டும் வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ