மாஸ் காட்டிய குழந்தை, ஆடிப்போன பாம்பு: திகிலூட்டும் வைரல் வீடியோ

Snake Child Viral Video: இப்படி ஒரு வீடியோவை நீங்கள் பார்த்திருக்க முடியாது. பெரிய கருநாகத்தை அசால்டாய் தூக்கிப்போட்டு மாஸ் காட்டும் குழந்தையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 25, 2023, 12:51 PM IST
  • விலங்குகளின் வீடியோக்களை இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள்.
  • அதுவும் பாம்புகளின் வீடியோக்களுக்கு சமூக ஊடகங்களில் தனி மவுசு உள்ளது.
  • பாம்பின் பல அதிர்ச்சியூட்டும் வீடியோக்களையும் நாம் அவ்வப்போது காண்கிறோம்.
மாஸ் காட்டிய குழந்தை, ஆடிப்போன பாம்பு: திகிலூட்டும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: அனைவரும் பார்த்து வாய் பிளக்கும் அளவுக்கு விசித்திரமான வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது. இப்படி ஒரு வீடியோவை நீங்கள் பார்த்திருக்க முடியாது. இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

விலங்குகளின் வீடியோக்களை இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். அதுவும் பாம்புகளின் வீடியோக்களுக்கு சமூக ஊடகங்களில் தனி மவுசு உள்ளது. பாம்பின் பல அதிர்ச்சியூட்டும் வீடியோக்களையும் நாம் அவ்வப்போது காண்கிறோம். அதேபோல் சிறு குழந்தைகளின் வீடியோக்களும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. சில வீடியோக்களில் இவர்கள் செய்யும் குறும்புகளால் நாம் மகிழ்கிறோம். சில சமயம் சில ஆபத்தான் வேலைகளால் அதிர்ச்சியடைகிறோம். 

தற்போதும் அப்படி ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இது ஒரு ஆபத்தான பாம்பு மற்றும் ஒரு சிறு குழந்தை பற்றியது. வீடியோவின் துவக்கத்தில் குழந்தை ஒன்று வீட்டின் முற்றத்தில் அமர்ந்து மகிழ்ச்சியாக விளையாடுவதைக் காண முடிகின்றது. ஆனால், அப்போது ஆபத்தான பாம்பு ஒன்று அதன் அருகில் ஊர்ந்து செல்கிறது. அதன் பிறகு வீடியோவில் நாம் காணும் காட்சி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. 

மேலும் படிக்க | Dangerous Kiss: முத்தத்தில் எத்தனை வகை இருந்தாலும் இந்த கிஸ் கொஞ்சம் டேஞ்சர் தான் 

குழந்தையின் அருகில் சென்ற பாம்பு

வைரலாகி வரும் இந்த வீடியோவில், முற்றத்தில் ஒரு சிறு குழந்தை அமைதியாக விளையாடுவதை காண முடிகிறது. ஆனால் சிறிது நேரத்தில் மிகவும் ஆபத்தான தோற்றமுடைய பாம்பு ஒன்று ஊர்ந்து குழந்தையின் அருகே செல்கிறது. குழந்தையின் அருகில் சென்று அது இயல்பாக ஆடிக்கொண்டு இருக்கிறது. அது தனது முகத்தை முன்னோக்கி நகர்த்தியவுடன், குழந்தை வேடிக்கையாக அதை பிடிக்கிறது. இந்த விளையாட்டு நீண்ட நேரம் நீடிக்கிறது. அதன் பிறகு நடக்கும் காட்சி நம்மை இன்னும் வியப்பில் ஆழ்த்துகிறது. பாம்பை பிடித்த குழந்தை அதை ஓரமாக தள்ளி விடுகிறது. 

பார்த்தால் திகிலூட்டும் அந்த வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rajibul Islam (@rajibul9078)

இந்த வீடியோவுக்கு பல வித ரியாக்ஷன்களும் கமெண்டுகளும் வந்த வண்ணம் உள்ளன. வீடியோ எடுப்பதற்காக குழந்தையை இப்படி ஒரு ஆபத்தில் ஆழ்த்திய நபர்களை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த வீடியோ rajibul9078 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. 

மேலும் படிக்க | Viral Video: தாய்பாலுக்கு மிஞ்சியது எதுவும் இல்லை...குட்டி யானை தாய்பால் குடிக்கும் அரிய காட்சி! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News