Dangerous Kiss: முத்தத்தில் எத்தனை வகை இருந்தாலும் இந்த கிஸ் கொஞ்சம் டேஞ்சர் தான்

Elephant Video Viral: அன்பே சிவம் என்பதை விட, அன்பே அழகு என்று சொல்லிக் கொடுக்கிறதோ இந்த பிஞ்சு யானை?  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 10, 2022, 03:07 PM IST
  • மனிதனைக் கொஞ்சும் யானைக்குட்டி வீடியோ வைரல்
  • யானையின் பாச வீடியோ வைரலாகிறது
  • இணையத்தைக் கலக்கும் குட்டி யானையின் அன்பு முத்தங்கள்
Dangerous Kiss: முத்தத்தில் எத்தனை வகை இருந்தாலும் இந்த கிஸ் கொஞ்சம் டேஞ்சர் தான் title=

வைரல் வீடியோ: இணையத்தின் ஆக்கரமிப்பில் நமது வாழ்க்கை வந்துவிட்ட பிறகு, சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இருந்தாலும், அதன் ஒவ்வொரு இயக்கமும் நமது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவற்றில் சில ஆக்கப்பூர்வமாக என்றால், சில எதிர்மறை விளைவுகளும் உள்ளன. எது எப்படி இருந்தாலு, இணையத்தின் மூலம் நாம் பல வித விஷயங்களை பற்றி தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை கொடுத்து ஆச்சரியப்படுத்துகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் ஜாலியாக இருக்கத் தேவையான காமெடிக்கும் சமூக ஊடகங்களில் பஞ்சமில்லை.

தற்போது டிவிட்டரில் வைரலாகும் ஒரு வீடியோவில், யானைக்குட்டி ஒன்றின் அன்புக்கு அனைவரும் அடிமையாகின்றனர். இந்த வீடியோ யானைக்கும் மனிதனுக்கும் இடையிலான பிணைப்பைக் காட்டுகிறது. அன்புக்கு பிரதிபலனாக அன்பே ஈடாகும் என்ற மிகப் பெரிய உண்மையை அழகாய் சொல்லும் யானையின் க்யூட் வீடியோவைப் பார்த்தால் மனம் நெகிழ்கிறது.

மேலும் படிக்க | திருமணத்தில் திடீரென நுழைந்த காளை ஆடிய ஆட்டம்: திகிலூட்டும் வைரல் வீடியோ

யானையின் பிரம்மாண்டத்தைப் பார்த்தால், அதன் அன்பு நமக்கு பெரிய அளவில் தெரியாமல் போய்விடும். ஆனால், தனது உருவத்தைப் போலவே, மனதிலும் அன்பை பிரம்மாண்டமாக தேக்கி வைத்திருக்கும் இந்த யானைக்குட்டி வீடியோவைப் பார்த்து மகிழுங்கள்.

'இந்த யானையை பார்த்தால் மனம் நெகிழ்ச்சியாக உள்ளது' என ஒருவர் எழுதியுள்ளார். 'மனிதர்கள்கூட அன்புக்கு இந்த அளவுக்கு அடிமையாவார்களா?’ என்ற கேள்வி எழுப்பும் யானைக்குட்டியின் அன்பு வீடியோ வைரலாவதில் அனைவருக்கும் மகிழ்ச்சித் தான். அன்பே சிவம் என்பதை விட, அன்பே அழகு என்று சொல்லிக் கொடுக்கிறதோ இந்த பிஞ்சு யானை?  

மேலும் படிக்க | இது உனக்கு தேவையா...நபரை வெச்சி செஞ்ச பாம்பு: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News