வைரல் வீடியோ: இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக வலைத்தளங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


முயல்கள் மற்ற செல்லப்பிராணிகளைப் பார்த்து அச்சப்படும் குணம் கொண்டவை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது நிஜமல்ல. முயல்கள் மற்ற விலங்குகளுடன் ஒன்றாக இருக்கவே விரும்புகின்றன. ஒரு வீட்டில் முயலுடன் மற்ற செல்லப்பிராணிகளும் வளர்கப்பட்டால், முயல்கள் அந்த விலங்குகளுடனும் இணக்கமாகவும், ஒற்றுமையுடனும் இருக்கவே விரும்புகின்றன. 


மேலும் படிக்க | வெச்ச குறி தப்பாது: வேற லெவலில் வறட்டி தட்டி வைரலான பெண் 


செல்லமாக வளர்க்கப்படும் நாய்கள் மற்றும் பூனைகளுடன் இவை எளிதில் நட்பு பாராட்டத் தொடங்குகின்றன. ஒரு முயல் மற்றும் நாய்க்குட்டியின் கியூட்டான தோழமையின் வீடியோ ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. இரண்டு விலங்குகளின் நட்பும் மிக ஆழமாக உள்ளது.


முயலுடனேயே இருக்கும் நாய்க்குட்டி, தானும் ஒரு முயல் என்றே நினைத்துக்கொள்கிறது. முயலைப் போலவே அது தத்தித் தத்திச் சென்று பார்க்கிறது. இது காண்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.


முயலாய் மாறிய நாய்க்குட்டியின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்: 



இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அழகான மற்றும் வேடிக்கையான விலங்கு வீடியோக்களை அவ்வப்போது பகிரும் 'buitengebieden' என்ற ட்விட்டர் பக்கத்தால் இந்த கிளிப் ட்விட்டரில் வெளியிடப்பட்டது. வீடியோவில், நாய்க்குட்டி ஒன்று ஒரு வீட்டில் கருப்பு முயலுடன் சுற்றித் திரிவதை காண முடிகின்றது. தன்னை ஒரு முயல் என நினைத்துக்கொண்ட நாய்க்குட்டி, முயலின் பின்னால் அதைப் போலவே குதித்து, அதன் அசைவுகளை காப்பி அடிப்பதை பார்க்க முடிகின்றது. முயலும் நாய்குட்டியும் ஒன்றாக குதித்து விளையாடும் காட்சிகள் காண்பதற்கு மிகவும் அழகாக உள்ளன. 


நெட்டிசன்கள் இந்த வீடியோவை மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். இந்த வீடியோ அனைவரது முகத்திலும் புன்னகையை வரவைக்கிறது. இந்த கியூட்டான வீடியோவுக்கு இது வரை 11.8 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களும், 537k லைக்குகளும், 70k ரீட்வீட்களும் கிடைத்துள்ளன. 


மேலும் படிக்க | யாரு பெருசுனு அடுச்சு காட்டு..மாறி மாறி சண்டையிடும் பூனைகளின் வைரல் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR