வைரல் செய்திகள்: சமூக வலைத்தளங்களில் பல வித வினோத வீடியோக்களு படங்களும் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீக காலங்களில் பாம்புகளின் வீடியோக்களும் புகைப்படங்களும் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விலங்குகளின் உலகம் மிகவும் சுவாரஸ்யமானது. சமூக ஊடகங்களில் இந்த அற்புதமான உயிரினங்களின் வேடிக்கையான வீடியோக்கள் வைரலாகின்றன. காடுகளில் உள்ள விலங்குகளின் வீடியோக்கள் மற்றும் படங்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமானவை. அவை சமூக ஊடகங்களில் அடிக்கடி வைரலாகின்றன.
தென்னாப்பிரிக்காவின் காடுகளில் மிகவும் அரிதான மற்றும் இரு தலைகள் கொண்ட பாம்பின் புகைப்படம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.
பாம்புகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிக் எவன்ஸ் இரண்டு தலைகள் கொண்ட சதர்ண் பிரவுன் எக் ஈட்டர் பாம்பின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இந்த அரியவகை பாம்பை ஒருவர் தனது தோட்டத்தில் கண்டதாகவும், இதனை பிடிக்க தான் அழைக்கபட்டதாகவும் இவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். சதர்ண் பிரவுன் எக் ஈட்டர் பாம்பு பொதுவான, முற்றிலும் பாதிப்பில்லாத இனம் என்று கூறிய அவர், இருப்பினும், இரண்டு தலைகள் கொண்ட பாம்பு அரிதானது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | காற்றில் மிதக்கும் மலைப்பாம்பு, அதன் பிடியில் ஒரு கிளி: வைரலான கிலியூட்டும் காட்சி
இந்த பாம்பை தனது தோட்டத்தில் கண்ட நபர் அதற்கு யாரும் தீங்கு விளைவிக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஆகையால், அதை ஒரு பாட்டிலில் வைத்து பின்னர் எவன்ஸிடம் எடுத்துச் செல்லச் சொன்னார்.
இரு தலை அரிய பாம்பின் புகைப்படங்களை இங்கே காணலாம்:
“இந்த இரு தலை பாம்பைப் பார்ப்பது மிகவும் விசித்திரமான காட்சியாக இருந்தது. இது ஒரு இள வயது, சுமார் ஒரு அடி நீளம் கொண்ட பாம்பாகும். அது நகர்வதைக் காண மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. சில நேரங்களில், தலைகள் இரண்டும் எதிர் எதிர் திசையில் செல்ல முயற்சிக்கின்றன. சில நேரங்களில், இது ஒரு தலையை மற்றொன்றின் மீது வைத்துக்கொள்கிறது.” என்று எவன்ஸ் பதிவில் எழுதியுள்ளார்.
பாம்பு தற்போது பாதுகாப்பாக உள்ளது என்றும் அவர் கூறினார். "இதை வெளியே விடுவதில் அர்த்தமில்லை. எனக்குத் தெரிந்தவரை, இந்த பாம்புகள் நீண்ட காலம் வாழ்வதில்லை. இது காடுகளில் நீண்ட காலம் நீடிக்காது. இது அரிதாகவே நகர்கிறது. அப்படி நகரும்போதும், மிகவும் மெதுவாகச் செல்கிறது. இது வேட்டையாடுபவருக்கு மிகவும் எளிதான தேர்வாக இருக்கும். இந்த பாம்புகள் பறவை முட்டைகளை மட்டுமே சாப்பிடுகிறார்கள் ” என்று அவர் கூறினார்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தலைகளுடன் பிறக்கும் விலங்குகளுக்கு பாலிசெபாலி என்ற நிலை உள்ளது. இது பாலூட்டிகளை விட ஊர்வனவற்றில் மிகவும் பொதுவானது.
மேலும் படிக்க | Viral Video: நாகப்பாம்பை கடித்து குதறும் கீரி; மனம் பதற வைக்கும் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR