நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராகுல்காந்தி பேசும் 38 நிமிடமும் நிலநடுக்கம் தான் ராகுலை கிண்டல் செய்த பாஜக!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சுமித்ரா மகாஜன் அனுமதி அளித்துள்ளார். இதனையடுத்து இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் வரும் இன்று (ஜூலை 20) நடைபெறுகிறது. 


பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மாலை ஆறு மணிக்கு மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளது. 


விவாதத்தின் போது ஒவ்வொரு கட்சியும் பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஆளும் பா.ஜ.க அரசு 3.38 மணி நேரம் பேச உள்ளது. காங்கிரசுக்கு 38 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முதலில் நோட்டீஸ் கொடுத்த தெலுங்கு தேசம் கட்சிக்கு 13 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளது. 


நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பேசுவதற்கு காங்கிரசுக்கு சுமார் 38 நமிடங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் பேசும் 38 நமிடமும் நிலநடுக்கம் தான் என பாஜக கிண்டல் செய்துள்ளது.