பார்த்தவர்களுக்கு அதிசய மழை, பார்க்காதவர்களுக்கோ இப்படியும் மழை பெய்யுமா என்ற வியப்பு! அப்படிப்பட்ட ஒரு மாமழை பெய்தது ஒரு ரயில் நிலையத்தில் தான்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்துக் கொண்டிருக்கும்போது, திடீரென பணத்தாள்கள் பறந்து, மழைபோல கொட்டினால் அதிசயமாகத்தானே இருக்கும்? இது உஜ்ஜைனின் நாக்டா ரயில் நிலையத்தில் பெய்த அபூர்வ மழை.


நாக்டா ரயில் நிலையத்தில் ஒரு வயதான பிச்சைக்காரர் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். திடீரென அவர் பணத்தாள்களை மழைபோல் பொழிந்தார்.  பணத்தாள், ரயில்நிலைய பிளட்பாரத்தில் பரவலாக பறந்துக் கொண்டிருந்தது.


இது குறித்த தகவல் ரயில்வே காவல்துறைக்கு (Railway Police) தகவல் கொடுக்கப்பட்டது.


ALSO READ | வங்கியில் இருந்து பணம் எடுத்தால் TDS செலுத்த வேண்டும்!


பண மழை
தகவல் கிடைத்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, ​​அவர்களுக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. ரயில்வே பிளாட்பாரத்தில் 100, 500 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடக்கிறது. அதன் நடுவில் வயதான பிச்சைக்காரர் ஒருவர் அமர்ந்துள்ளார். 


அதிர்ச்சியடைந்த ரயில்வே போலீசார் இது குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர். வயதான பிச்சைக்காரர் பணத்தை தூக்கி வீசியதாக அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.


அந்த வயதான பிச்சைக்காரனின் நிலையைப் பார்க்கும் பெரும்பாலனவர்கள், பிச்சையாக பணத்தை கொடுப்பார்கள். 
ஆனால், ஒரு பிச்சைக்காரரின் இவ்வளவு பணம் இருக்குமா என்பது அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. நூற்றுக்கணக்கான நோட்டுகள் சிதறிக் கிடப்பதை பார்க்கும்போது, இவர் உண்மையிலுமே பிச்சை எடுப்பவர் தானா (Rich Beggar) என்ற கேள்வி அனைவருக்கும் எழுவது இயல்பானது.


READ ALSO | திடீரென கணக்கில் வந்த ஒரு கோடி பணம்


பணக்கார பிச்சைக்காரர் புர்ஹான்பூரில் வசிப்பவர்
இந்த வீடியோ வைரலானதும், இது குறித்து பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த பிச்சைக்காரன் நீண்ட காலமாக இங்கு அமர்ந்து பிச்சை எடுப்பதாக, ரயில் நிலையத்தில் இருந்து எம்எஸ்டி வழியாக செல்லும் தினசரி பயணிகள் தெரிவித்தனர். புர்ஹான்பூரில் வசிக்கும் இந்த வயது முதிர்ந்த பணக்காரர் என்றும் பலர் தெரிவித்தனர்.


மனநிலை பாதிக்கப்பட்ட இந்த முதியவரை, சிலர் துன்புறுத்துவதாகவும் சில பயணிகள் தெரிவித்தனர். அன்றும் அப்படி யாரோ அவரை சீண்டியதால், கோபமடைந்த முதியவர், தனது துணிகளை வீசத் தொடங்கினார். 
அதில் இருந்த பணத்தாள்கள் மழைபோல பொழிய ஆரம்பித்தன. விரிவான விசாரணைக்குப் பிறகு, நாக்டா ரயில் நிலையத்திற்கு வந்த ரயில்வே போலீசார், அங்கு சிதறிக்கிடந்த பணத்தாள்களை சேகரித்து, பிச்சைக்காரனிடம் திருப்பி கொடுத்து, புர்ஹான்பூருக்கு அனுப்பி வைத்தனர்.


பிச்சைக்காரன் கோபத்தில் முணுமுணுத்துக் கொண்டிருந்தான். அவரது கோபமும், அதிருப்தியும் தெளிவாகத் தெரிந்தது. இந்த பணமழை சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம் பிச்சைக்காரனை சுற்றியே ரயில் பயணிகள் கூடி நின்று பேசிக் கொண்டிருந்தனர்.


ALSO READ | வீட்டில் இருந்தபடியே வங்கிக் கிளையை மாற்றலாம்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR