புதுடெல்லி: ஆன்லைன் மூலமாகவே பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் காலம் இது. ஆனால் இன்னும் பலர் பண பரிவர்த்தனைகளை ரொக்கமாகவே செய்ய விரும்புகிறார்கள். இதற்காக வங்கியில் இருந்து பணத்தை எடுக்கலாம்.
ஆனால் ஒரு குறிப்பிட்டத் தொகைக்குப் பிறகு வங்கியில் இருந்து பணம் எடுக்கும்போது TDS செலுத்த வேண்டியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 194N இன் கீழ் பணம் எடுப்பதற்கான TDS செப்டம்பர் 1, 2019 முதல் அல்லது 2019-2020 நிதியாண்டு முதல் பொருந்தும்.
வருடாந்தர பணம் எடுக்கும் வரம்பு
டிடிஎஸ் சட்டத்தின் பிரிவின் (194N Section 194N of TDS Act) கீழ், ஒரு நிதியாண்டில் ஒருவர் மொத்தமாக 20 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக எடுத்தால், டிடிஎஸ் செலுத்த வேண்டும் (TDS on cash withdrawal). கடந்த மூன்று தொடர்ச்சியான மதிப்பீட்டு ஆண்டுகளில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கு அதிகபட்ச வரம்பு பொருந்தும்.
வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, ஒருவர் கடந்த மூன்று மதிப்பீட்டு ஆண்டுகளில் அனைத்து அல்லது ஏதேனும் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்திருந்தால், அவர் ஒரு நிதியாண்டில் மொத்தமாக ரூ.1 கோடிக்கு மேல் பணத்தை எடுத்தால், அவர் பணத்தில் TDS செலுத்த வேண்டும். செலுத்த வேண்டும்
வங்கிகள் அல்லது தபால் நிலையங்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பணம் எடுத்தால் டிடிஎஸ் கழிக்கப்படும். ஒரு நிதியாண்டில் (Financial Year) அந்த நபரின் வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் இருந்து 20 லட்சம் முதல் 1 கோடி ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கப்படும் போது டிடிஎஸ் கழிக்கப்படுகிறது.
READ ALSO | December 2021: மொத்தம் 12 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது
மத்திய அல்லது மாநில அரசு ஊழியர், வங்கி, தபால் அலுவலகம், வங்கியின் வர்த்தக முகவர், வங்கியின் ஒயிட் லெவல் ஏடிஎம் இயக்குபவர் அல்லது ரிசர்வ் வங்கியின் ஆலோசனையின் பேரில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட நபராக இருந்தால், அவர் TDS செலுத்த வேண்டியதில்லை.
TDS எவ்வளவு கழிக்கப்படும்?
வங்கியில் இருந்து பணத்தை எடுக்கும் நபர், முந்தைய மூன்று நிதியாண்டுகள் அல்லது மூன்றில் ஏதேனும் ஒரு ஆண்டில் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்திருந்தால், 1 கோடி ரூபாக்கு மேல் ரொக்கப் பணம் எடுத்தால் 2% என்ற விகிதத்தில் TDS கழிக்கப்படும்.
இது தவிர, ரூ.20 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால் 2 சதவிகிதம், 1 கோடி ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் 5% டிடிஎஸ் கழிக்கப்படும், பணம் எடுத்தவர் கடந்த மூன்றாண்டுகளில் ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால் தான் இந்த விதிமுறைகள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | வீட்டில் இருந்தபடியே வங்கிக் கிளையை மாற்றலாம்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR