சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு நேற்று சூப்பரான நாளாக இருந்தது. நேற்று காலை அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வந்து ரசிகர்கள் மகிழ்ந்திருந்த நிலையில், மாலை 6 மணிக்கு வெளியான படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களின் உற்சாகத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. மேலும் படத்தின் செகண்ட் லுக்கும் வெளியாகி ரசிகர்களுக்கு இடையில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் சில ரசிகர்களால் பெரும் கொடூரமான சோகமும் நிழந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீண்ட இடைவெளிக்கு பிறகு தலைவர் ரஜினி படத்தின் போஸ்டர்கள் (Annaatthe First Look) வெளியானதால், அதுவும் ஒரே நாளில் மூன்று முறை அண்ணாத்த படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டதால், ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டார்கள்.


தமிழ்நாட்டை பொறுத்த வரை உச்ச நடிகர்களின் படங்கள் குறித்து அறிவிப்பு, படத்தின் தலைப்பு, போஸ்டர்கள், டீசர், ட்ரைலர் மற்றும் படம் திரைக்கு வரும் நாள் என எந்த அறிவிப்பும் வெளியானாலும், அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் பெரிய பெரிய கட்-அவுட் வைத்து, அதற்கு மாலை போட்டு, கற்பூரம் காட்டி, பால் அபிசேகம் பண்ணி பர் அதர்களம் பண்ணுவார்கள்.


ALSO READ | முறுக்க, கொதிக்க, தெறிக்க வெளியானது அண்ணாத்த மோஷன் போஸ்டர்


அதையெல்லாம் தாண்டி, தற்போது ரஜினி ரசிகர்கள் ஒருபடி மேலே சென்று, யாருமே எதிர்பார்க்காத வகையில், அண்ணாத்த போஸ்டருக்கு ரத்தத்தால் அபிசேகம் செய்துள்ளனர். அண்ணாத்த படத்தின் போஸ்டருக்கு ஆட்டை பலி கொடுத்து, அதன் ரத்தத்தை போஸ்டர் மேல் ஊற்றி அபிசேகம் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 



இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? அதேநேரத்தில் இந்த சம்பவத்தை கண்டித்து தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் பேசுவாரா அல்லது அறிக்கையாவது விடுவாரா? என பலர் எதிர்பார்கின்றனர்.


ALSO READ | சரவெடி: அண்ணாத்த செகண்ட் லுக் ரிலீஸ்


சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் அண்ணாத்த (Annaatthe). இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.


ALSO READ | அண்ணாத்த படத்தின் மாஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR