சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகும் தர்பார் திரைப்பட மோஷன் போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பின் காவல்துறை அதிகாரியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் திரைப்படம் "தர்பார்". இத்திரைப்படத்தில் ரஜினிக்கு கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கபட்டிருந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #DarbarMotionPoster என்ற ஹேஸ்டேக் டிரேண்டிங் செய்தனர். மேலும், படத்தில் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 


இப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒருசில வீடியோக்கள், புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் லீக் ஆகி வைரலாகியது. இதனையடுத்து படக்குழுவினர், தாமாகவே முன்வந்து படத்தின் புகைப்படங்களையும், டைட்டில் கார்டினையும் இணையத்தில் வெளியிட்டனர். மேலும், இந்த புகைப்படம் மற்றும் டைட்டில் கார்டினை கொண்டு அற்புதமான மோஷன் போஸ்டரினை ரசிகர்கள் தயாரிக்க வேண்டும் எனவும் படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதில் தேர்ந்தெடுக்கப்படும் பர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தனர்.



இந்தநிலையில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகி வருகின்றன. தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை அதிகர்ரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இந்த மோஷன் போஸ்டர் இனையதளத்தி வைரளாகி வருகிறது.