வைரல் செய்திகள்: சமூக வலைத்தளங்களில் பல வித வினோத வீடியோக்களு படங்களும் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீக காலங்களில் பாம்புகளின் வீடியோக்களும் புகைப்படங்களும் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகளின் உலகம் மிகவும் சுவாரஸ்யமானது. சமூக ஊடகங்களில் இந்த அற்புதமான உயிரினங்களின் வேடிக்கையான வீடியோக்கள் வைரலாகின்றன. காடுகளில் உள்ள விலங்குகளின் வீடியோக்கள் மற்றும் படங்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமானவை. அவை சமூக ஊடகங்களில் அடிக்கடி வைரலாகின்றன. 


தென்னாப்பிரிக்காவின் காடுகளில் மிகவும் அரிதான மற்றும் இரு தலைகள் கொண்ட பாம்பின் புகைப்படம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. 


பாம்புகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிக் எவன்ஸ் இரண்டு தலைகள் கொண்ட சதர்ண் பிரவுன் எக் ஈட்டர் பாம்பின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இந்த அரியவகை பாம்பை ஒருவர் தனது தோட்டத்தில் கண்டதாகவும், இதனை பிடிக்க தான் அழைக்கபட்டதாகவும் இவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். சதர்ண் பிரவுன் எக் ஈட்டர் பாம்பு பொதுவான, முற்றிலும் பாதிப்பில்லாத இனம் என்று கூறிய அவர், இருப்பினும், இரண்டு தலைகள் கொண்ட பாம்பு அரிதானது என்று தெரிவித்தார்.



இரு தலை அரிய பாம்பின் புகைப்படங்களை இங்கே காணலாம்: 


“இந்த இரு தலை பாம்பைப் பார்ப்பது மிகவும் விசித்திரமான காட்சியாக இருந்தது. இது ஒரு இள வயது, சுமார் ஒரு அடி நீளம் கொண்ட பாம்பாகும். அது நகர்வதைக் காண மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. சில நேரங்களில், தலைகள் இரண்டும் எதிர் எதிர் திசையில் செல்ல முயற்சிக்கின்றன. சில நேரங்களில், இது ஒரு தலையை மற்றொன்றின் மீது வைத்துக்கொள்கிறது.” என்று எவன்ஸ் பதிவில் எழுதியுள்ளார்.