Rashmika Mandanna: AI தொழில்நுட்பம் தற்போது வளர்ந்து வரும் மிக முக்கியமான ஒரு அம்சம் ஆகும். இதன் மூலம் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், அதே அளவுக்கு பலவீனங்களும் உள்ளது.  இது சைபர் கிரைமினல்களை எளிதாக உருவாக்குகிறது.  இந்த AI மூலம் நம்பமுடியாத எதையும், நம்பும்படி மாற்ற முடியும்.  ஒருவர் பேசாத ஒன்றை, பேசியது போல ஆடியோ அல்லது வீடியோ என எந்த வடிவிலும் மாற்ற முடியும்.  வரும் காலத்தில் இதன் பிரச்சனை அதிகம் இருக்கும் என்று எண்ணிக்கொண்டு இருக்க, தற்போதே எழுந்துள்ளது.  நடிகை ராஷ்மிகா மந்தனா அரைகுறை ஆடையுடன் லிஃப்ட் ஒன்றிற்குள் நுழைவது போல் சமீபத்தில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  இருப்பினும், நன்றாக பார்த்தால் அது ராஷ்மிகா இல்லை என்றும், வேறொருவர் முகத்தை மாற்றி அமைத்துள்ளனர் என்பதும் தெரிய வருகிறது. 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | முட்டை பொரி சாப்பிடுபவர்கள் உடனே இந்த வீடியோவை பாருங்கள்.. அதிர்ச்சி தரலாம்


இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.  பொதுவாக இது போன்ற பொய் செய்திகளுக்கு கண்டுகொள்ளாதா ராஷ்மிகா மந்தனா இந்த வீடியோவிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். "இதைப் பகிர்வதில் நான் மிகவும் வேதனைப்படுகிறேன், மேலும் தற்போது ஆன்லைனில் பரப்பப்படும் இந்த வீடியோ பற்றி நான் பற்றி பேச வேண்டும். இதுபோன்ற ஒன்று எனக்கு மட்டுமல்ல, தொழில்நுட்பம் இவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுவதால் இன்று மிகவும் தீங்கு விளைவிக்கும் நம் ஒவ்வொருவருக்கும் மிகவும் பயமாக இருக்கிறது. இன்று, ஒரு பெண்ணாகவும், ஒரு நடிகையாகவும், எனது பாதுகாப்பு மற்றும் ஆதரவு அமைப்பாக இருக்கும் எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் நான் பள்ளியில் அல்லது கல்லூரியில் படிக்கும் போது எனக்கு இது நடந்தால், இதை எப்படி சமாளிப்பது என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. இதுபோன்று நம்மில் அதிகமானோர் பாதிக்கப்படுவதற்கு முன், இதை ஒரு சமூகமாகவும் அவசரமாகவும் நாம் கவனிக்க வேண்டும்." என்று பதிவிட்டுள்ளார்.


இந்நிலையில், தற்போது உண்மையில் அந்த பெண் யார் என்பது பற்றிய வீடியோ வெளியாகி உள்ளது.  அவரது முகத்தில் ராஷ்மிகா முகத்தை மாற்றி அமைத்து உள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும், இந்த போலி வீடியோவை உருவாக்கியது யார் என்பதும் அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதும் மர்மமாகவே உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இது முதல்முறை நடக்கும் சம்பவம் அல்ல, ஏனெனில் சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் இதேபோன்ற போலி வீடியோக்களுக்கு பலியாகியுள்ளனர். இந்த வீடியோவை நடிகர் அமிதாப் பச்சனும் பகிர்ந்து, தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.



மேலும் படிக்க | மடி மீது முதலை..கழுத்தில் பாம்பு..ஆபத்துடன் விளையாடும் சிறுவன்! வைரல் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ