‘Not said by me, thank you’! என்ற ரத்தன் டாட்டாவின் விளக்கத்திற்கான காரணம்?
ஆதார் அட்டை-மது விற்பனை இணைப்பு பற்றிய பதிவை தான் சமூக ஊடகங்களில் பதிவிடவில்லை என்று தொழிலதிபர் ரத்தன் டாடா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்
மது விற்பனையை ஆதார் கார்டு மூலமாக விற்பனை செய்ய வேண்டும் என்று தொழிலதிபர் ரத்தன் டாடா சொன்னதாக சமூக ஊடகங்களில் பதிவுகள் வைரலாகின.
அதாவது, மது வாங்குவோருக்கு அரசு தரும் “உணவுக்கான மானியங்கள்” நிறுத்தப்பட வேண்டும் என்றும், மது வாங்க வசதி உள்ளவர்கள் கண்டிப்பாக உணவு வாங்க முடியும் என்றும் தொழிலதிபர் டாடா தெரிவித்தார். வசதியில்லை என நாம் அவர்களுக்கு உணவை இலவசமாகக் கொடுத்தால் அவர்கள் பணம் கொடுத்து மது வாங்குகிறார்கள். அப்படியென்றால் மது வாங்க பணம் இருப்பவர்கள் உணவு வாங்கும் வசதி உள்ளவர்கள். எனவே, அவர்களுக்கு அரசின் உணவு மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும் என ரத்தன் டாடா கூறியதாக சமூக ஊடகங்களில் பதிவுகள் வைரலாகின.
ஆனால், அது உண்மையில்லை என ரத்தன் டாடா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தான், ஆதார் அட்டை-மது விற்பனை இணைப்பு பற்றிய பதிவை போடவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
"இது என்னால் கூறப்படவில்லை. நன்றி" என டாடா தனது இன்ஸ்டா பதிவில் தெரிவித்துள்ளார். பிரபல தொழிலதிபரான ரத்தன் டாட மிகுந்த அனுபவசாலி. 83 வயதான அவர், மது விற்பனைக்கு ஆதார் அட்டையைப் பயன்படுத்துவதை ஆதரிப்பதாக சொன்ன பதிவில், “ஆதார் அட்டை நகலைப் பெற்றுக் கொண்டு மது விற்பனை செய்ய வேண்டும். மது வாங்குவோருக்கு அரசாங்க உணவு மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும்” என்று அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.
மேலும், “மது வாங்க வசதி உள்ளவர்கள் கண்டிப்பாக உணவு வாங்கலாம். நாம் அவர்களுக்கு இலவசமாக உணவு கொடுத்தால், அவர்கள் மது வாங்குவார்கள்" என்றும் அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.
பிரபலமான தொழிலதிபர் ரத்தன் டாட்டாவிற்கு மக்கள் மத்தியில் பெருமதிப்பு இருந்து வருவதால், அவர் கூறியதாக சொன்ன இந்தப் பதிவை பலரும் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள். ஆனால், இக்கருத்தை எங்கு, எப்போது கூறினார் என்பதற்கான ஆதாரத்தை யாரும் இணைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read Also | பிகினியும், முகக்கவசமும்… இது நவீன பாணி உடையலங்காரம்!
பிரபலங்களின் பெயரால் சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பரவலாவது வாடிக்கையாகிவிட்டது. அவர்கள் கருத்து சொன்னதாகக் கூறி அவ்வப்போது, ஒரு சில பதிவுகள் வைரலாகின்றன.
கடந்த ஆண்டும் ரத்தன் டாடா சொன்னதாக ஒரு போலிச் செய்தி வெளியானது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததாக டாடா தெரிவித்ததாக கூறப்பட்டது. இருப்பினும், டாடா அத்தகைய எந்த அறிக்கையுடனும் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.
டாடா ட்விட்டரில் எழுதினார், "இந்த இடுகை நான் சொல்லவில்லை, எழுதவில்லை. வாட்ஸ்அப் மற்றும் சமூக தளங்களில் என் பெயரால் பரப்பப்பட்ட செய்திகளை நம்பவேண்டாம். நான் ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், நான் அதை என் அதிகாரப்பூர்வ சேனல்களில் சொல்வேன்" என்று டாடா தெரிவித்திருந்தார்.
சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பரவி வருவதால், பிரபலங்கள் அதை எதிர்கொள்ள ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. செய்திகள் வெளியானவுடன் முடிந்த அளவு விரைவில் ஒரு மறுப்பை வெளியிடுவது தான் அது.
Also Read | பாலியல் வாழ்க்கை பற்றிய கேள்விக்கு ஒலிம்பிக் தங்க மகன் நீரஜ் சோப்ராவின் பதில் என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR