இணைய உலகம் பல வித வீடியோக்களை நாம் கண்டு வருகிறோம்.  இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. அதன்படி இங்கு வெளியாகியுள்ள வீடியோவில் ரேசன் கார்டில் பெயருக்கு பின்னால் வரக்கூடிய பெயரை தத்தா என்பதற்கு பதிலாக குட்டா என எழுதியதால் அதிகாரியின் காரை மறித்து நாய் குரைப்பது போல கத்தி முறையிடும் நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசாங்க ஆவணங்களில் ஏற்படும் தவறுகள் ஒரு நபருக்கு பல வகையான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இதனால் நாம் பல நேரங்களில் அரசாங்க துறைகளின் அடிக்கடி ரவுண்டுகள் மற்றும் அதிகாரிகளின் கெஞ்சல்களால் அவதிப்படுகிறோம். அதன்படி மேற்கு வங்க மாநிலம், பங்குரா மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் குமார் தத்தாவுக்கும் அப்படித்தான் நடந்துள்ளது.  இவரின் பெயர் ரேஷன் கார்டில் தவறுதலாக பதிவாகியுள்ளது. இவர் தனது பெயரில் உள்ள தவறை மாற்ற விண்ணப்பித்த நிலையில், இரு முறையும் அது சரி செய்யப்படாமல் தவறாகவே இருந்துள்ளது. 


மேலும் படிக்க | 'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள் 


இந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையும் பெயர் மாற்ற விண்ணப்பித்த நிலையில், அவரது பெயர் ஸ்ரீகாந்தி தத்தா என்பதற்கு பதிலாக ஸ்ரீகாந்தி குட்டா இந்தியில் (குட்டா என்றால் நாய் என்றாகும்) என்று தவறுதலாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் கடுப்பான ஸ்ரீகாந்தி அப்பகுதிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் காரை மறித்து தனது கோரிக்கை நாய் போல குரைத்து காட்டி புகார் அளித்தார்.



அவரது செயலை புரியாமல் திகைத்து போன அதிகாரி பின்னர் கோரிக்கையை வாங்கி படித்து சரி செய்வது தருவதாகக் கூறி அங்கிருந்து கிளம்பினார். ஸ்ரீகாந்தி தத்தா நாய் போல குரைத்து காட்டி மனு தரும் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க | பள்ளியில் மாணவி செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ