Viral Video: பூனையின் முன்னான் பொட்டிப் பாம்பாக அடங்கிய புலி!

புலியும் பூனையும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டால் என்ன ஆகும் என்பதை இந்த வைரல் வீடியோவில் காணலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 21, 2022, 11:23 PM IST
  • வீடியோவில், புலி பூனையைப் பார்த்து பயந்து போவதைக் காணலாம்.
  • சமூக வலை தளத்தில் வைரலாகும் வீடியோ.
  • புலி பயந்து பின்வாங்குவதைக் காணலாம்.
Viral Video: பூனையின் முன்னான் பொட்டிப் பாம்பாக அடங்கிய புலி! title=

விலங்குகளின் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காட்டு விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகளின் வீடியோக்கள் அதிக பார்வையாளர்களைக் கவர்கின்றன. காட்டு விலங்குகளை வேட்டையாடுவது போன்ற வீடியோக்கள் அடிக்கடி பகிரப்படுகின்றன. சமூக ஊடகங்களிலும் செல்லப்பிராணிகளின் வேடிக்கையான வீடியோக்கள் நிறைந்துள்ளன.

அப்படி வைரலாகும் ஒரு வேடிக்கையான வீடியோ இதோ.  பூனை ஒன்றும் புலியும் நேருக்கு நேர் சந்தித்தால் என்ன நடக்கும்?... பொதுவாக பூனையை புலி வேட்டையாடி அடித்து கொல்லலாம். அல்லது பூனை சமயோஜிதமாக தப்பித்து செல்லலாம். ஆனால், இங்கே நடப்பதே வேறு.  

இது, நம்மை கொஞ்சம் சிரிக்க வைக்கும் வீடியோ இது.  சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், கூண்டில் அடைபட்டிருக்கும் புலியின் முன் பூனை தைரியமாக அமர்ந்திருக்கிறது. பூனை கூண்டுக்கு வெளியே அமர்ந்திருக்கிறது. இரண்டும் பரஸ்பரம் பார்த்துக் கொள்கின்றன.

வியக்க வைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:

அந்த வீடியோவில், புலி பூனையை சிறிது நேரம் பார்த்துவிட்டு, தலையை தாழ்த்தி பூனையை நோக்கி சாய்கிறது. ஆனால் புலி நெருங்கியதும், பூனை அதைத் தாக்க முன்னோக்கி பாய்ந்தது. இதை பார்த்த புலி பின்வாங்குவதை வீடியோவில் காணலாம்... Wild_animal_pix  என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். வீடியோவை பலர் லைக் செய்துள்ளனர்.

மேலும் படிக்க | ஆட்டமா தேரோட்டமா... இது மயிலின் மயக்கும் ஆட்டம்... சொக்க வைக்கும் அற்புத வீடியோ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News