உலகின் சிறந்த உணவு வகைகளின் பட்டியலை பற்றி கூறினால் அதில் நிச்சயம் இந்திய உணவுகள் தான் முதலிடத்தில் இருக்கும்.  அந்த அளவிற்கு மற்ற நாட்டு உணவு வகைகளை விட இந்திய உணவிற்கு ருசி அதிகம்.  நம் இந்திய உணவுகளில் தான் பல்வேறு வண்ணங்கள் பல்வேறு ருசிகள் நிறைந்து நாவை நடனமாட செய்யும், ஒரு முறையான விருந்து என்றால் அது இந்திய உணவுகள் தான்.  தற்போது, வைரலாகி வரும் ஒரு வீடியோவில், தாய்லாந்தைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் தென்னிந்திய தாலியை ருசிக்கிறார், அந்த உணவின் ருசியால் ஈர்க்கப்பட்டவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் பலரையும் கவர்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இது தான் ‘கண்டதும் காதலா’; பூனையின் அழகில் மயங்கிய குரங்கின் அழகிய முத்தம்..!!


இந்த வீடியோவை, யூடியூபர் மார்க் வீன்ஸ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  அந்த வீடியோவில், அவர் பாங்காக்கில் உள்ள சுகம் என்கிற உணவகத்தில் அமர்ந்து இருக்கிறார்.  அவருக்கு ஒரு வாழை இலை விரித்து அதில் அவருக்கு  மாங்காய் ஊறுகாய், கூட்டு, பொரியல், வறுவல், அவியல், பூரி, அப்பளம், வடை, பாயசம், ரசம், சாம்பார் என 18 விதமான தென்னிந்திய உணவுகளை பருமருகின்றனர்.  அவரது அருகிலுள்ளவர் கையால் சாப்பிட சொல்ல யூடியூபரும் கையால் உணவை ருசிக்கிறார்.  சாம்பார், வத்தக்குழம்பு, ரசம் என வகைவகையாய் சாப்பிவிட்டு விட்டு ஒவ்வொரு உணவு வகையின் ருசியிலும் மெய்மறந்து போகிறார்.  அனைத்து வகையான உணவுகளையும் ரசித்துவிட்டு மிக அருமையான உணவு என்று பெருமையாக கூறுகிறார். 


 



இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.  இதனை பார்த்த நெட்டிசன்கள் உணவின் ருசி குறித்து மார்க் கூறியதை நினைத்து பெருமைப்படுகின்றனர்.  "அது அருமையாக இருக்கிறது" என்று ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார், மேலும் "இது உண்மையிலேயே ஒரு அழகான உணவு கலாச்சாரம்," என்று தாய்லாந்து யூடியூபர் மார்க் கூறியுள்ளார்.


மேலும் படிக்க | காரில் குத்தாட்டம் போட்ட மணப்பெண், வாய் பிளந்த மணமகன்: வீடியோ வைரல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR