இர்பானுக்கு ‘செக்’ வைத்த யூடியூப்: உண்மையில் நடந்தது என்ன?!
பிரபல யூடியூப் சானலான ‘இர்பான் வியூ’ சானல் திடீரென முடக்கப்பட்டுள்ளது.
தமிழ் யூடிப் சானல்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக கொரோனா லாக் டவுனுக்குப் பிறகு இந்த எண்ணிக்கையானது பல மடங்கு அதிகரித்துள்ளது. உங்க செல்போன் நம்பர் என்ன எனக் கேட்பதுபோல உங்க யூயூப் சானல் சானல் பெயர் என்ன எனக் கேட்பது தற்போது சகஜமாகிவிட்டது. அந்த அளவுக்கு யூடியூப் உலக அளவில் ஆக்கிரமித்துள்ளது.
தமிழில் ஏராளான சானல்கள் இருந்தபோதிலும் குறிப்பிட்ட சில சானல்களின் பெயர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்; அதில் ஒன்று- ‘இர்பான் வியூ’ எனும் சானல். விதவிதமான உணவுகள், உணவகங்கள் மற்றும் பல்வேறு வித்தியாசமான வீடியோக்கள் உள்ளிட்டவற்றை இர்பான் எனும் நபர் வழங்கிவந்தார். நெட்டிசன்கள் மத்தியில் மட்டுமல்லாது கமல்ஹாசன் போன்ற திரையுலகின் உச்ச நட்சத்திரங்களின் மத்தியிலும் இர்பான் கவனம் பெற்றிருந்தார். அண்மையில் விருது விழாவொன்றில்கூட கமல்ஹாசனால் பாராட்டப்பட்டார் இர்பான்.
மேலும் படிக்க | விடாது துரத்தும் Beast Vs KGF2: என்ன சொல்கிறார் நெல்சன்?
இப்படியாக மக்கள் மத்தியில் பாப்புலராக இயங்கிவந்த இந்த யூடியூப் சானல் தற்போது திடீரென முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இர்பான், முடக்கப்பட்டதற்கான முழுமையான காரணம் தனக்கு இதுவரை தெரியவில்லை எனக் கூறியுள்ளார். யூடியூப் நிர்வாகத்திடம் இது தொடர்பாக மேல் முறையிடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், விதிமுறைகளை மீறும் அளவுக்கு தனது வீடியோவில் அப்படி என்ன கண்டெண்ட் இருந்தது எனத் தனக்குத் தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | பற்றி எரியும் Beast VS KGF-2: விஜய் குறித்து என்ன சொன்னார் யஷ்?!
யூடியூப்பில் லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்களைக் கொண்டுள்ள இர்பான் வியூ சானல் திடீரென முடக்கப்பட்டுள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அத்துடன் மற்ற யூடியூபர்களையும் இது கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR