₹6 லட்சம் மதிப்பிலான ப்ளூடூத் செருப்பு; வசூல் ராஜா MBBS பாணியில் ஹைடெக் காப்பி.!
![₹6 லட்சம் மதிப்பிலான ப்ளூடூத் செருப்பு; வசூல் ராஜா MBBS பாணியில் ஹைடெக் காப்பி.! ₹6 லட்சம் மதிப்பிலான ப்ளூடூத் செருப்பு; வசூல் ராஜா MBBS பாணியில் ஹைடெக் காப்பி.!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2021/09/27/199121-bluetooth-chappel.jpg?itok=0RIhXJO1)
தேர்வில் மோசடிக்கு உதவ ப்ளூடூத் சாதனங்களுடன் இணைக்கப்பட்ட செருப்புகளை அணிந்த 5 பேர் பிகானரில் கைது செய்யப்பட்டனர்.
பிகானேர்: தேர்வுகளின் போது பிட் அடித்த காலம் போய் விட்டது. இப்போது தொழில்நுட்ப உதவியுடன் ஹை டெக் அளவில் காப்பி அடிப்படுகின்றன. ஒரு சமீபத்திய ஹைடெக் மோசடி வழக்கு, எம்பிபிஎஸ் திரைப்படத்தை உங்களுக்கு நிச்சயம் நினைவூட்டும். தேர்வில் மோசடிக்கு உதவ ப்ளூடூத் சாதனங்களுடன் இணைக்கப்பட்ட செருப்புகளை அணிந்த 5 பேர் பிகானரில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் மோசடி குழுவை சேர்ந்தவர்கள். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 6 லட்சம் ரூபாய்க்கு செருப்புகளை வழங்கியுள்ளனர்.
ஆசிரியர்களுக்கான ராஜஸ்தான் தகுதித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் நடைபெற்றது . ராஜஸ்தான் அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக ஆவதற்கு ஒரு நபர் REET தேர்ச்சி பெற வேண்டும்.16.51 லட்சம் மாணவர்கள் தேர்வுக்காக பதிவு செய்தனர். மோசடி முயற்சிகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஜெய்ப்பூர் உட்பட பல மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகள் கூட நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், ராஜஸ்தான் (Rajastan) காவல்துறையினர் பல REET மாணவர்களின் செருப்புகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல புளூடூத் சாதனங்களை கைப்பற்றினர். இந்த செருப்புகளில் சிம் கார்டுடன் இணைக்கப்பட்ட சிறிய அழைப்பு சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. கண்களுக்கு புலப்படாத வகையில் மிகச்சிறிய சிறிய புளூடூத்-சாதனம் தேர்வு எழுதுபவர்களின் காதுகளில் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால், காவல் துறைனர் சந்தேகத்தின் பேரில் மேற்கொண்ட நடவடிக்கையில், புளூடூத் கருவி மூலம் தேர்வில் தேர்ச்சி பெற உதவிய குற்றவாளியை கைது செய்தனர்.
ALSO READ | Vehicle Insurance: கார் இன்சூரன்ஸ் பாலிசி கிளைம் நிராகரிப்படாமல் இருக்க வேண்டுமா..!!!
6 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட செருப்புகளின் அடிப்பகுதியில் நிறுவப்பட்ட ப்ளூடூத் கருவி மூலம் கேள்வித்தாளில் உள்ள கேள்விகளுக்கு குற்றவாளிகள் உதவி செய்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். புளூடூத் மினி தொலைபேசி மாணவரின் காதில் பொருத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் வெளியில் இருந்து அவருக்கு கேள்விக்காக விடை அளிக்க யாரோ உதவியுள்ளனர். காதில் பொருத்தப்பட்டிருந்த கருவி தோல் நிறத்தில் இருந்ததாலும், அளவில் மிகக்சிரியதாக இருந்ததாலும் கண்களுக்கு புலப்படாத வகையில் இருந்தது.
ALSO READ | சிறப்பம்சங்களுடன் ₹15,000 - ₹20,000 வரையிலான டாப் ‘5’ ஸ்மார்போன்கள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR