துரித உணவுகளில் பலருக்கும் விருப்பமான உணவுகளில் ஒன்று பர்கர். அதிலும் மெக்டொனால்ட்ஸ் பர்கர் என்றால் கேட்கவே வேண்டாம். ஆனால், அப்படி ஆர்வமாக சாப்பிட போனவர் நிலை இன்று மோசமாக உள்ளது.
ஜெய்ப்பூரில் மாளவியா நகரில் அமைந்துள்ள McDonald's உணவகத்தில், ஆசையாக பர்கர் சாப்பிட போனவர் நிலை மோசமாகியது. பர்கர் சாப்பிடும் போது தேள் போன்ற புழு அதிலிருந்து வந்ததால் அங்கே பதற்றமான சூழ்நிலை உருவாகியது. ஒரு வாடிக்கையாளர் ஆவலாக தான் ஆர்டர் செய்த பர்கரை சாப்பிடும் போது, தேள் போன்ற புழு அதில் இருந்ததால், அந்த இளைஞனின் உடல்நிலை மோசமாகி, ஜெய்புரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ALSO READ | அதிசயம்! இறந்த 45 நிமிடத்திற்கு பின் ‘உயிர்த்தெழுந்த’ பெண்..!!
இளைஞனின் உடல்நிலை இன்னும் மோசமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற. அப்குதியில் உள்ள ஜவஹர் நகர் காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது, ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், புகாரை திரும்ப பெறுமாறு காவல்துறையால் அழுத்தம் கொடுக்கப்படுகிறது எனவும் கூறப்படுகிறது. ஏராளமான மக்கள் மெக்டொனால்டு உணவகத்திற்கு (McDonald's Restaurant) வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இனிமேல் எந்த உணவுப் பொருட்களிலும் புழு அல்லது விஷ பூச்சி வெளி வருவது போன்ற அதிர்ச்சி தரும் சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க காவல்துறை, புகார் கொடுத்தவருக்கு அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக, மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு எதிகாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.
குறிப்பிட்ட இந்த சம்பவத்தில் தருண் என்ற இளைஞன் பர்கரை சாப்பிடும் போது, தேள் போன்ற பூச்சிகளின் சில பகுதியும் வயிற்றுக்குள் போய்விட்டது. அப்போதிருந்து அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, ஜெய்புரியா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.
ALSO READ | Viral News: செல்ல நாய்க்கு அடித்த யோகம்; விமானத்தில் ‘சொகுசு’ பயணம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR