இந்த பூனைய கண்டுபிடிச்சா 15,000 ரூபாய் வெகுமதி: யாரோட பூனை தெரியுமா….
நேபாளத்தின் முன்னாள் தேர்தல் ஆணையர் இலா ஷர்மா தனது காணாமல் போன பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் 15,000 ரூபாய் வெகுமதி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
புதுடில்லி: நேபாளத்தின் முன்னாள் தேர்தல் ஆணையர் இலா ஷர்மா தனது காணாமல் போன பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் 15,000 ரூபாய் வெகுமதி அளிப்பதாக அறிவித்துள்ளார். பூனையின் கண்கள் பச்சையாக இருக்கும் என்றும் மூக்கில் ஒரு அடையாளம் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ் ஒய் குரேஷியின் மனைவி ஷர்மா, புதன்கிழமை ரயிலுக்காகக் காத்திருந்த போது, கோரக்பூர் ரயில் நிலையத்தில் அவரது பூனை காணாமல் போனது என்று ஒரு அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ரயிலின் பலத்த சத்தம் கேட்டு பயந்த பூனை அங்கிருந்து ஓடியது என்று அரசு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரிஜ்பான் பாண்டே தெரிவித்தார்.
ALSO READ: Viral Video: Dairy Plant இல் இருந்த பால் தொட்டியில் உல்லாசம்.....
ஷர்மா ரயில் நிலையத்தின் பல்வேறு தளங்களிலும், நகரத்தின் பல பகுதிகளிலும் இது தொடர்பாக பல சுவரொட்டிகளை வைத்துள்ளார். காணாமல் போன பூனையை கண்டுபிடிக்க உதவுமாறு மக்களை அவர் கேட்டுக்கொள்கிறார். பூனைக்கு இரண்டு வயதாகிறது என்றும் அதற்கு பச்சை நிற கண்களும் மூக்கில் பழுப்பு நிற புள்ளியும் உள்ளதாக அவர் அடையாளம் கூறினார்.
சுவரொட்டிகளில் காணாமல் போன செல்லப்பிராணியைக் கண்டுபிடிப்பதற்கான வெகுமதியை அறிவித்த அவர், யாராவது அதைக் கண்டுபிடித்தால் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறும் மக்களை கேட்டுக்கொண்டார், என்றார் பாண்டே.
அவர் தனது மகள் மற்றும் ஓட்டுநருடன் நகரத்தில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார் என்று இன்ஸ்பெக்டர் பாண்டே கூறினார்.
"நாங்களும் அந்த பூனையைத் தேடுகிறோம், ஆனால் இப்போது வரை அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று இன்ஸ்பெக்டர் கூறினார்.
"எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய அவர் யாருக்கும் எதிராக எந்தவொரு எழுத்துப்பூர்வ புகாரையும் கொடுக்கவில்லை. அவர் எங்கள் உதவியை வாய்மொழியாகக் கேட்டுள்ளார். யாரையும் அவர் குறை சொல்லவில்லை. எனவே இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய எந்த காரணமும் இல்லை” என்று பாண்டே கூறினார்.
ALSO READ: Twitter-ல் trend ஆகிறது #BoycottAmazon: காரணம் என்ன தெரியுமா….
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR