இன்றைய வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காட்டில் சிங்கங்களும் புலிகளும் மற்ற விலங்குகளை வேட்டையாடும் பல வீடியோக்களை நாம் பொதுவாக பல வீடியோக்களில் பார்த்திருப்போம். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் ஒரு காண்டாமிருகம் யானையைப் பார்த்த பிறகு அதன் பாதையை மாற்றாமல் சண்டைக்கு நிற்கிறது.அப்புறம் என்ன... யானுடன் மோதிக் கொண்ட சில நொடிகளிலேயே காண்டாமிருகம் தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்து கொண்டது. காண்டாமிருகத்திற்கு யானை எப்படி பாடம் கற்பித்தது என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.


மேலும் படிக்க | திருமணத்தில் மூட்டை மூட்டையாய் பணத்தைக் கொட்டிய தங்கச்சி செண்டிமெண்ட் வீடியோ வைரல்


காண்டாமிருகம் தைரியமாக யானையைத் தாக்கியது
இந்த வீடியோ 46 வினாடிகள் கொண்டது. இந்த காட்சி இரவு நேரத்தை அரங்கேறியுள்ளது என்பதை இந்த வீடியோவை பார்த்தால் தெரிகிறது. யானையும் காண்டாமிருகமும் எதிரும் புதிருமாக நிற்கின்றன. முதலில் யானை, காண்டாமிருகத்தை நோக்கி நகர்கிறது. காண்டாமிருகம் இந்த தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு யானையுடன் நேருக்கு நேர் செல்கிது. யானையை விட சிறியதாக இருந்தாலும் காண்டாமிருகம் பயப்படுவதில்லை. யானையை வெல்வதற்கு தன் முழு பலத்தையும் அந்த காண்டாமிருகம் பயன்படுத்துக்கிறது. ஆனால் யானை சாமர்த்தியமாக அந்த காண்டாமிருகத்தை கீழே தள்ளி தரையில் எறிந்து அதன் கூர்மையான பற்களை சேதம்படுத்தி விடுகிறது. இதனால் காண்டாமிருகத்திற்கு பலத்த காயம் ஏற்படுகிறது. பின்னர் காயம் அடைந்த அந்த காண்டாமிருகம் போர்க்களத்தை விட்டு ஓடுவதை நாம் வீடியோவில் காணலாம்.


காண்டாமிருகம் மற்றும் யானையின் சண்டை வீடியோவை இங்கே காணுங்கள்:



வைரலாகி வரும் இந்த வீடியோவை இந்திய வன சேவை (IFS) அதிகாரி 'சாகேத் படோலா' (@Saket_Badola) ஜூன் 6 அன்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவுக்கு சுமார் இரண்டாயிரம் லைக்குகள் மற்றும் 86 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும், பல பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


"யானை வெற்றி பெறுவது உறுதி" என்று ஒரு பயனர் எழுதினார், சிலர் "பெரும் சண்டை" என்று மற்றொரு பயனர் எழுதியுள்ளார்.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | என்னவொரு வேகம்.. பயங்கரமாக மரம் ஏறும் மலைப்பாம்பு: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ