என்னவொரு வேகம்.. பயங்கரமாக மரம் ஏறும் மலைப்பாம்பு: வைரல் வீடியோ

Python Tree Climbing Viral Video: இணையத்தில் வைரலான ஒரு வீடியோவில், மலைப்பாம்பு ஒன்று அதிவேகமாக மரத்தில் ஏறுவதைக் காண முடிகிறது. அது மரத்தைச் சுற்றிக் கொண்டு வேகமாக மேல்நோக்கி ஏறுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 7, 2023, 12:34 PM IST
  • ராட்சத மலைப்பாம்பின் வைரல் வீடியோ.
  • மரம் ஏறும் அழகான காட்சி.
  • இன்றைய வைரல் வீடியோ.

Trending Photos

என்னவொரு வேகம்.. பயங்கரமாக மரம் ஏறும் மலைப்பாம்பு: வைரல் வீடியோ title=

இன்றைய வைரல் வீடியோ: தற்போது பரபரப்பாக இயங்கி வரும் உலகத்தில், நம் சமூக ஊடகத்துடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வருகிறோம். ஏனெனில் இணையதளம் ஒரு தனி உலகமாக த்தையே இயங்கி வருகிறது. போதைக்கு அடிமையாகி இருப்பது போல் தற்போது மக்கள் இணையத்தளத்திற்கு அடைமையாகி உள்ளனர். ஏனெனில் இங்கு பல வித வியக்க வைக்கும் விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். அத்துடன் இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல தகவல்களை வழங்கி வழங்குகின்றன. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இங்கு பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான சில விஷயங்களும் இடம்பெற்றுள்ளது. மறுபுறம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் பாம்புகள் வீடியோவுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.

பொதுவாக பாம்புகள் இணையத்தின் ராஜாவாக செயல்பட்டு வருகிறது. ஏனெனில் பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு தனி கிரேஸ் இருந்து வருகின்றது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு மிகமுக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒன்றாக இருந்தாலும், மக்களிடையே தனி இடத்தை பிடித்துள்ளது. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இதனாலே பாம்புகள் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக காட்டுகிறோம். இந்நிலையில் பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிறப்பட்டு வரும் நிலையில் தற்போது பழைய பாம்பு வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது.

மேலும் படிக்க | மணமகள் செய்த வேலை... அந்த ரியாக்‌ஷன்!! கொண்டாடும் நெட்டிசன்ஸ்: செம கியூட் வைரல் வீடியோ

ஆபத்தான மலைப்பாம்பு
பொதுவாக மலைப்பாம்புகள் நச்சுத்தன்மையற்ற பாம்புகள் பிரிவிலுள்ள பருமன்-மிகுந்த பாம்பு வகை ஆகும். இவை பெரும்பாலும் ஆபிரிக்க ஆசியக் கண்டங்களிலேயே காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் தன் இரையை நெரித்துக் கொன்று அதன் பிறகு அவற்றை உண்ணும். இவறில் 12 இனங்கள் இதுவரையிலும் இனங்காணப்பட்டுள்ளன. இந்த வகைப் பாம்பு தன் இரையை நெரித்துக்கொன்று பின்னர் உட்கொள்ளும். வாருங்கள் இப்போது இந்த பாம்பின் வைரல் வீடியோவை காண்போம்.

கிடுகிடுவென மரம் ஏறும் மலைப்பாம்பு
பாம்புகள் மரத்தில் ஏற முடியும் என்பது தெரிந்ததே, ஆனால் மலைப்பாம்பு ஒன்று இவ்வளவு வேகமாக மரம் ஏறும் காட்சி வெளிவந்துள்ளது இதுவே முதல் முறையாகும். இணையத்தில் வைரலான இந்த வீடியோவில், மலைப்பாம்பு ஒன்று அதிவேகமாக மரத்தில் ஏறுவதைக் காண முடிகிறது. அதுவும் அந்த மலைப்பாம்பு அழகாக மரத்தைச் சுற்றிக் கொண்டு வேகமாக மேல்நோக்கி ஏறுவது தான் இந்த வீடியோவில் சிறப்பு.

மலைப்பாம்பின் இந்த வீடியோவை இங்கே காணுங்கள்:

வைரலாகி வரும் இந்த வீடியோ @Rainmaker1973 என்கிற டிவிட்டர் பக்கத்திலன் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | கை, கால், தொடை, இடுப்பு... பெண்ணை கவ்விய புலி: அன்புத் தொல்லையால் அரண்ட பெண், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News