‘நிலுவையில் உள்ள ₹3 கோடி வரியை உடனே செலுத்தவும்’ : அதிர்ச்சியில் ரிக்ஷா ஓட்டுநர்
நிலுவையில் உள்ள ₹3 கோடி வருமான வரிக்கான நோட்டீஸ் வந்ததில் இருந்து ரிக்ஷா ஓட்டிநரின் தூக்கம் தொலைந்து விட்டது.
உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளிக்கு வருமான வரி நோட்டீஸ் வந்தது, அதுவும் நிலுவையில் உள்ள மூன்று கோடி அளவிற்கான வருமான வரி யை செலுத்துமாறு வருமான வரி நோட்டீஸ் கிடைத்தவுடன், ரிக்ஷா ஓட்டிநரின் தூக்கம் தொலைந்து விட்டது. அதன் பிறகு ரிக்ஷாக்காரர் போலீசை அணுகினார்.
நோட்டீசில் குறிப்பிட்டிருந்த நிலுவை தொகையை பார்த்து போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். 2018-19ம் நிதியாண்டில் ரிக்ஷாக்காரர் ரூ.43 கோடிக்கு மேல் வியாபாரம் செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மதுராவில் உள்ள பகல்பூர் பகுதியைச் சேர்ந்த அமர் காலனியில் சிக்கும் பிரதாப் சிங் என்பவர், தனக்கு வந்த வருமான வரித்துறை நோட்டீஸ் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இருப்பினும், ரிக்ஷா ஓட்டுநரின் புகார் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. எனினும், இது தொடர்பாக உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
ALSO READ | பதைபதைக்க வைக்கும் வீடியோ.; ஆற்றில் அடித்து செல்லப்படும் வீடு.!!
இதற்கிடையில், சிங் தனது அதிர்ச்சிக்கதையை சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார். அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கியில், பான் கார்டு வேண்டும் எனக் கூறியதால், பகல்பூரில் உள்ள பான் அட்டை பெறும் மையத்தில், அவர் பான் கார்டு (PAN Card) பெற விண்ணப்பித்துள்ளார்.
ரிக்ஷாக்காரர் பிரதாப் சிங்கிற்கு தவறுதலாக பகல்பூரைச் சேர்ந்த சஞ்சய் சிங்கின் பான் கார்டின் நகல் கிடைத்துள்ளது. அவர் படிக்காததால், அசல் பான் கார்ட் விபரங்களை சர் பார்க்க வில்லை என்பதோடு, அதன் வண்ணத்தையும் வேறுபடுத்திப் பார்க்க தெரியவில்லை. இந்நிலையில், அக்டோபர் 19 ஆம் தேதி அவருக்கு வருமான வரித்துறை அதிகாரிகளிடமிருந்து அழைப்பு வந்தது மேலும் அவர் ரூ.3,47,54,896 செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
யாரோ ஒருவர், அவருக்கு தெரியாமல் அவரிடைய பெயரில், ஜிஎஸ்டி எண்ணைப் பெற்றதாகவும், அவர் 2018-19ல் 43,44,36,201 ரூபாய் வியாபாரம் செய்ததாகவும் அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக சிங் மேலும் தெரிவித்தார். சிங் இது குறித்து மேலும் கூறுகையில், எப்ஐஆர் பதிவு செய்யுமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ALSO READ | கழிப்பறையில் ‘திடீர்’ பிரசவம்; ‘உள்ளே’ விழுந்த சிசு இறந்த சோகம்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR