பதைபதைக்க வைக்கும் வீடியோ.; ஆற்றில் அடித்து செல்லப்படும் வீடு.!!

கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுத்தியுள்ள பேரழிவை உணர்த்தும், அதிர்ச்சி தரும்  வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 17, 2021, 05:19 PM IST
பதைபதைக்க வைக்கும் வீடியோ.; ஆற்றில் அடித்து செல்லப்படும் வீடு.!! title=

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு , இடுக்கி, திருச்சூர், பட்டணம்திட்டா, கோட்டயம் போன்ற பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுத்தியுள்ள பேரழிவை உணர்த்தும், அதிர்ச்சி தரும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. 

கோட்டயம் பகுதியில் எடுத்ததாக கூறப்படும் இந்த வீடியோவில், வீடு ஒன்று சரிந்து ஆற்றில் அடித்து செல்லப்படுகிறது. மனதை பதை பதைக்க செய்யும் இந்த வீடியோவை ஸ்டாலின் ஜேகப் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள வீடு அப்படியே ஆற்றில் சரிந்து அடித்து செல்லப்படுவதைக் காணலாம். இந்த வீடியோவை பார்க்கையிலே மனம் பதை பதைப்பதோடு, வெள்ளத்தின் பேரழிவை உணர்த்துகிறது. 

ALSO READ | Kerala flood: ஒரே குடும்பத்தில் மூன்று தலைமுறையினர் அடித்து செல்லப்பட்ட சோகம்..!!

கேரளாவின் மலைப்பகுதி மாவட்டங்களான கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிலர் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து மலைப் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ராணுவம் மற்றும் இந்திய விமானப் படையின் உதவியை கேரள அரசு நாடியுள்ளது.

கேரளாவில் (Kerala) கடந்த மூன்று நாட்களாக தீவிர கனமழை பெய்து வருகிறது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பட்டணம்திட்டா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. இந்த 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ |  Kerala Devastating Rain: கேரள கனமழை நடத்தும் கோரதாண்டவம்.... இடுக்கி நிலச்சரிவில் 7 பேர் மாயம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News