ஒரு விபத்து ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக தலைகீழாக புரட்டிபோட்டுவிடும். ஆனால், அதனை பற்றிய பயம் வாகனம் ஓட்டுபவர்களுக்கும், சாலையில் செல்பவர்களுக்கும் இருப்பதில்லை. சாலையில் செல்லும் ஒருவர், தாம் பத்திரமாக சென்று திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தில் சென்றாலே, நமக்கு வரும் ஆபத்துகளை தவிர்த்துவிட முடியும். யாரோ ஒருசிலர் வாகனம் ஓட்டும்போது செய்யும் தவறுகளுக்காக, சம்பந்தமே இல்லாத நபர்களும், அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படுவதை கூட பார்த்திருக்கிறோம். நொடியில் மரணத்தை கொண்டுவந்து விடும் ஒரு விபத்து. சொல்லொண்ணா துயரங்களையும் தந்துவிடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அடக்கொடுமையே! பெண்ணை இம்ப்ரஸ் பண்ண இவனுக்கு இந்த கதியா? வீடியோ வைரல்


அப்படி இருக்கையில், வாகனம் ஓட்டுவது மற்றும் சாலையில் செல்லும்போது கவனமாக இருப்பதை அனைவரும் உணர வேண்டும். இதுகுறித்து பல ஆண்டுகளாக பல்வேறு முறைகளில் அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் தொடர் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இருந்தபோதும் சாலை விபத்துகள் குறைந்தபாடில்லை. உலகிலேயே அதிக விபத்துகள் ஏற்படும் நாடாக இந்தியா இருக்கிறது. உயிரிழப்புகளிலும் முன்னணியில் இருக்கிறது. இதனை தவிர்க்க ஒவ்வொருவரும் அவரவர் சிந்தையில் தெளிவாக இருந்தால் மட்டுமே முடியும். இந்நிலையில், சாலை விழிப்புணர்வு குறித்து எடுக்கப்பட்ட காமெடி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.



அந்த வீடியோவில் சாலையில் நடந்து செல்லும் நபர் தாறுமாறாக நடந்து செல்கிறார். அப்போது அவர் பின்னால் வாகனம் ஓட்டி வருபவர், முன்னால் செல்பவரால் அவதியடைகிறார். உடனே, வண்டியை நிறுத்தும் அவர், சாலையில் ஒழுங்காக நடந்து செல்லாத நபரிடம் சென்று கைக்குலுக்கிறார். எதற்காக கைகுலுக்கிறார் என தெரியாமல் இருக்கும் அந்த நபர், ஏன் கைகுலுக்கிறீங்க என கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் வாகன ஓட்டி, உங்க ரோடு எல்லாம் போட்டு கொடுத்திருக்கிறாரு என தெரிவிக்கிறார். இல்லை, எங்க ஒன்னும் ரோடு போடவில்லை என தாறுமாறாக நடந்த நபர் சொல்ல, அப்புறம் எதுக்குடா இப்படி நடந்து போற... ஒழங்கா ஓரமா போடா என கூறுகிறார். இந்த வீடியோ காமெடியாக இருப்பதால் இணையவாசிகளை கவர்ந்துள்ளது. 


மேலும் படிக்க | வயசானாலும் சீற்றம் மட்டும் குறையாமல் கர்ஜிக்கும் கிழட்டு சிங்கம்: வைரலாகும் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEata