வயசானாலும் சீற்றம் மட்டும் குறையாமல் கர்ஜிக்கும் கிழட்டு சிங்கம்: வைரலாகும் வீடியோ

Animal Attack Video: வயதானாலும் சிங்கத்தின் சீற்றம் குறைவதில்லை என்று உணர்த்தும் வீடியோ வைரலாகிறது.... பிடரிமயிருடன் கர்ஜிக்கும் சிங்கத்தின் கர்ஜிப்புடன் கூடிய தாக்குதல் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வைரலாக்கிவிட்டது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 22, 2022, 03:44 PM IST
  • சிங்கிளா இருந்தாலும் நான் சிங்கம்டா! கர்ஜிக்கும் சிங்கம்
  • பிடரிமயிருடன் இருக்கும் முதிய சிங்கத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது
  • சீறும் சிங்கத்தை அடக்கி கூண்டுக்குள் அனுப்பும் மனிதர்கள்
வயசானாலும் சீற்றம் மட்டும் குறையாமல் கர்ஜிக்கும் கிழட்டு சிங்கம்: வைரலாகும் வீடியோ title=

வைரல் வீடியோ:  சமூக ஊடகங்களின் வரத்து, நமது வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அவற்றில் இருந்து நாம் பல விஷயங்களை கற்றுக் கொள்கிறோம். நாட்டு நடப்பு முதல் அழகுக் குறிப்பு வரை பல விஷயங்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்கிறோம். சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் வித வீடியோக்கள் நம்மை பரவசப்படுத்தினால், அவற்றில் சில பயப்படுத்துகின்றன. சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் விலங்குகளின் வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. வழக்கமாய் நாம் பார்க்க முடியாத பல விஷயங்களை இந்த வீடியோக்களில் நாம் காண்கிறோம்.

அருகில் சென்று பார்க்க முடியாத விலங்குகளின் பல அரிய தருணங்களை இவற்றில் கண்டு மகிழ்கிறோம். அன்றாடம் நடைபெறும் வழக்கமான செயல்களில் ஏற்படும் சிறு மாற்றமும் பதிவு செய்யப்பட்டால், அந்த வீடியோ சமூக ஊடகங்கள்ல் பதிவிடப்பட்டு வைரலாகிறது. வேட்டையாடும் விலங்குகள் சர்க்கஸ் விலங்குகளாய் நடத்தப்படும் காலம் தொடங்கியது முதல் அவற்றை நாம் மிருகக்காட்சி சாலைகளிலும் சர்க்கஸ்களிலும் பார்க்கத் தொடங்கிவிட்டோம்.  

மேலும் படிக்க | பதுங்கிப் பாயும் புலி! கடைசி நிமிடத்தில் எஸ்கேப் ஆன தோகைமயில்! பெண் மயில்களின் நிலை?

கடுமையான பலம் இருந்தாலும் காட்டு விலங்குகளை கட்டுப்படுத்தி வைக்கும்போது, அவை அடங்க்குவது போல தோன்றினாலும், அவ்வப்போது அவற்றின் குணம் வெளிப்படும். அது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்பதால், விலங்குகளின் வீடியோ அவ்வப்போது பெரிய அளவில் வைரலாகிறது. அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகிறது. சீறிப் பாயும் சிங்கத்தின் வலிமையை அடக்க சிரமப்படும் பணியாளர்களை சிங்கம் கொன்றுவிடுமோ என்றும் தோன்றுகிறது.

இந்த வீடியோவில் இருக்கும் சிங்கத்திற்கு வயதானாலும் அதன் சீற்றம் குறையவில்லை. அதன் உறுமல் சத்தம் இதயத்தை தடதடக்கச் செய்கிறது. சிங்கத்தின் பிடரிமயிரே அது வயதான கிழட்டுச் சிங்கம் என்பதைக் காட்டுகிறது.  

மேலும் படிக்க | என்னை பிளான் பண்ணி சிக்க வைச்சிட்டீங்களே! சீறும் முதலையை வேட்டையாடும் இளைஞர்

சிங்கிளாக இருந்தாலும் பலராலும் பிடிக்க முடியாத அளவு வலிமை கொண்ட சிங்கத்தை இருவர் கையாள்வது கடினமானதுதான். வெறித்தனமாக தாக்கும் ஆக்ரோஷமான சிங்கத்தின் வீடியோ இணையத்தில் பட்டையைக் கிளப்புகிறது! வைரலாகும் வீடியோ பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. சிங்கத்தின் சீற்றத்தின் முன் யாரும் நிற்கமுடியாது என்றாலும், பழக்கப்பட்ட சிங்கம் என்பதால் தைரியமாக பணியாளர்கள் கையாள்கின்றனர். 

சீறி வந்து கம்பீரமாக வந்து தாக்கி, சில நோடிகளில் அமைதியாகும் சிங்கத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. வைரல் வீடியோ உங்களுக்காக...

மேலும் படிக்க | பாய்ந்து வந்து கட்டிக்கொண்ட பெண் சிங்கம்: பாசமா, பகையா? வியக்க வைக்கும் வைரல் வீடியோ

சிங்கத்தின் பலம் அது சிங்கிளாக இருக்கும்போது அதிகரிக்கிறது என்று சொன்னாலும், மனிதர்களின் பாதுகாப்பில் இருக்கும்போது, சீறும் சிங்கமும் பொட்டிப்பாம்பாய் அடங்கித்தான் போக வேண்டியிருக்கிறது.

மேலும் படிக்க | பாய்ந்து வந்து மானை தாக்கும் சிங்கம்! தப்ப முடியாமல் கதறும் காட்டு மான்

விலங்குகளின் தாக்குதல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதைக் காட்டும் இந்த வீடியோவில், திடீரென எதிர்பாராத நேரத்தில் ஓடிச் சென்று தாக்கும் சிங்கத்தின் சீற்றம் அச்சத்தைக் கொடுக்கிறது.

இதுபோன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி சக்கைப்போடு போடுகின்றன. துள்ளியோடும் மானாலும் சிங்கத்தின் வேகத்திற்குக் ஈடு கொடுத்து ஓட முடியவில்லை.

மேலும் படிக்க | துள்ளி குதிக்கும் கன்றுக்குட்டியின் வைரல் வீடியோ! குட்டிக் கன்றின் சுட்டித்தனம்

மேலும் படிக்க | சிங்கிளாக வந்து சிங்கக்கூட்டத்தை சிதறடிக்கும் ஆக்ரோஷமான விலங்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News