'மாரி 2' படத்தில் இடம்பெற்ற  'ரவுடி பேபி' பாடல் பிரம்மாண்டமான சாதனையை செய்துள்ளது. தனுஷ் மற்றும் சாய் பல்லவி இருவரும் நடித்த இந்தப் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல். பிரபுதேவா நடனம் அமைத்த இப்பாடலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பெரும் வரவேற்பு தெரிவித்தனர்.
ஆனால், ரவுடி பேபி இந்த அளவுக்கு பிரபலமாகும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு மில்லியன் பேர் பார்த்த முதல் தென்னிந்திய திரைப்பட பாடலாக சாதனை படைத்துள்ளது ரவுடி பேபி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2018-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் 'மாரி 2' வெளியானாலும், 2019-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி தான் யூ டியூப் சேனலில் 'ரவுடி பேபி' பாடல் வீடியோ வடிவில் பதிவேற்றப்பட்டது. அன்று முதல் ரவுடி பேபி அதிரடியாக அனைவரையும் ஈர்த்து, வைரலானது.  


தற்போது 1 பில்லியன் பேருக்கும் மேல் பார்த்த சாதனையை பதிவு செய்துள்ள 'ரவுடி பேபி' பாடல் ஏற்படுத்திய புதிய வரலாற்றுச் சாதனைக்கு மாரி படக்குழுவினர் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.


தனுஷ் - அனிருத் கூட்டணியில் உருவான 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் யூ டியூப் சேனலில் பல சாதனைகளைப் படைத்தது. அவற்றை தனுஷ் - யுவன் கூட்டணியில் உருவான 'ரவுடி பேபி' பாடல் முறியடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.  
'ரவுடி பேபி'-இன் சாதனைக்கு மகிழ்ச்சி தெரிவித்து டிவிட்டரில் செய்தி பதிவு செய்துள்ளார் ந்த பாடலில் நடித்த ரவுடி பேபி தனுஷ்.



"என்ன ஒரு நல்ல தற்செயல் நிகழ்வு இது? வொய் திஸ் கொலவெறி டி பாடல் வெளியான 9வது வருடத்தின் அதே தினத்தில் ரவுடி பேபி 100 கோடி பார்வைகளை எட்டியுள்ளது. 100 கோடி பார்வைகளை எட்டிய முதல் தென்னிந்தியப் பாடல் இது என்பதில் மிக்க பெருமை கொள்கிறோம்.  எங்கள் ஒட்டுமொத்த படக் குழுவினரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை கூறிக் கொள்கிறோம்" என்று தனுஷ் உருக்கமாக டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.


பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ திரைப்படம் 2018ம்  ஆண்டு வெளியானது. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன.


you tube-இல் தற்போது ரவுடி பேபி ஏற்படுத்தியிருக்கும் சாதனை குறித்து தனது மகிழ்ச்சியை பரவசத்துடன் பகிர்ந்திருக்கிறார் ரவுடி பேபியின் இசைத் தந்தை யுவன் ஷங்கர் ராஜா.



ரவுடி பேபி பாடலை எழுதியவரும் தனுஷ் தான். அதுமட்டுமல்ல, பாடலைப் பாடியவரும் ரவுடி பேபி தனுஷ் தான். பிரபு தேவாவின் நடனத்திற்கு  தனுஷ் மற்றும் சாய் பல்லவி உயிர் கொடுத்திருந்தனர்.  இணையத்தில் யூ-ட்யூபில் வெளியாகி வைரலான ரவுடி பேபி பாடல், சர்வதேச பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று சாதனை படைத்தது. Congrats Rowdy baby!



தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR