ஒரு ரஷ்ய ஸ்டன்ட்மேன், ஜேம்ஸ்பாண்டின் கிளாசிக் திரைப்படமான The Man With The Golden Gun-ல் இடம்பெற்ற பிரபல "corkscrew" காட்சியினை மீண்டும் உருவாக்கியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதேப்போன்று கார் ஸ்டன்ட்களை செய்ய பலரையும் தூண்டி வருகிறது.



ரஷ்ய நாட்டைச் சேர்ந்த எவ்ஜெனி செபோடரேவ், கார் சண்டைக்காட்சிகளைக் கற்றுக் கொண்டவர். மேலும் திரைப்பட துறையில் சண்டைக்காட்சி கலைஞராகவும் செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் தற்போது ஹாலிவுட் திரைப்படத்தின் பிரபல கார் ஸ்டண்ட் காட்சியான ஜேம்ஸ்பாண்டின் கிளாசிக் திரைப்படமான The Man With The Golden Gun-ல் இடம்பெற்ற பிரபல "corkscrew" காட்சியினை மீண்டும் உருவாக்கியுள்ளார்.


தனது முயற்சிக்காக அவர் மூன்று வாகனங்களை முதலில் அழித்த பின்னர், தனது நான்காவது முயற்சியில் பிரபலமான தாவலை மேற்கொள்வதில் வெற்றி பெற்றுள்ளார். 



தனது முயற்சிகளின் பதிவினை செபோடரேவ் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் ஹெல்மெட் அணிந்து பழைய வாகனத்தில் அமர்ந்திருக்கிறார், அழுக்கு பாதையில் சவாரி செய்வதற்கு முன், ஒரு மர வளைவில் ஏறி சம்மர்சால்டிங் செய்து மணல் திட்டுகளில் இறங்குகிறார். இந்த வீடியோவானது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.


சரி,... ஜேம்ஸ்பாண்டின் கிளாசிக் திரைப்படமான The Man With The Golden Gun-ல் இடம்பெற்ற பிரபல "corkscrew" காட்சியினை உன்மையில் நடித்தது யார்... தொழில்முறை பிரிட்டிஷ் ஸ்டன்ட்மேன் டெர்ரி கிராண்ட் என்பவர் தான் இந்த உன்மை காட்சியினை நிகழ்த்தியவர். இதுதவிர அவர் மிக நீண்ட பீப்பாய் ரோலுக்கான 23 உலக சாதனைகளையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தனது ஸ்டன்ட் குறித்து செபோடரேவ் குறிப்பிடுகையில்., “எது என்னைத் தூண்டுகிறது?... நான் சிறந்தவனாக இருக்க விரும்புகிறேன், எல்லா வகையான கடினமான மற்றும் ஆபத்தான ஸ்டன்டுகளையும் செய்ய முடியும். நீங்கள் விரும்பியபடி அதைச் செய்ய உங்களிடம் பணம் இல்லையென்றாலும், எதுவும் சாத்தியமில்லை என்பதை ஸ்டண்ட் எனக்கு உணர்த்தியது. உங்களிடம் ஒரு குறிக்கோள் இருந்தால், அதைச் செய்யுங்கள், அதை மற்றொரு நாளுக்கு தள்ளி வைக்க வேண்டாம்,” என்று டெய்லி மெய்லுக்கு அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.