இன்றைய வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தினமும் தெரிந்துகொள்கிறோம். அதேபோல் இந்த இணைய உலகத்தில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல தகவல்களை வழங்கி வருகின்றன. இது போன்ற பல தகவல்களுடன் இந்த வீடியோக்களில் பலவித கேளிக்கைக்கான விஷயங்களையும் வெளிபடுத்தும் ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. ஆனால், சில வீடியோக்கள் அதையும் தாண்டி நம்மை ஆச்சிரியத்திலும், துக்கத்திலும் கொண்டு செல்கின்றது. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஏனெனில் இங்கு எடுக்கப்படும் பெரும்பாலான வீடியோ நம்மை சிரிக்கவே வைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் தினமும் பல வேடிக்கையான திருமண வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசில் இருக்கின்றன. சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும் நாம் பார்த்துள்ளோம். ஆனால், தற்போது மணமக்களின் ஒரு பரிதாபமான வீடியோ வெளியாகியுள்ளது. இதைப் பார்த்தால் கண்டிப்பாக நமக்கு அதிர்ச்சிதான் கிடைக்கும். 


மேலும் படிக்க | முன்ஜென்மத்தில் இந்த மாடு என்ஜினியரா இருந்திருக்குமோ? - வைரல் வீடியோ


மணமக்களுக்கு நடந்த அசம்பாவிதம்


தற்போது வைரல் ஆகியுள்ள இந்த வீடியோ நமக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒன்றாக அளிக்கின்றது. பொதுவாக திருமணங்களில் சில அசம்பாவித சம்பவங்கள் நடப்பது சகஜம் தான். ஆனால், இந்த வீடியோவில் மணமகனும், மணமகளும் ஒன்றாக மேடையில் நின்றுப்பதை நாம் காணலாம். அப்போது இருவரும் மாலை மாற்றிக்கொள்ள மேடையில் நிற்கிறார்கள். வீட்டின் உறவினர்களும் அங்கு உள்ளனர். மாலை மாத்துதல் நிகழ்ச்சியின் போது சடங்குகள் முடிக்கப்படுகின்றன, அப்போதுதான் மேடையில் விபத்து ஏற்படுகிறது. இது மணமகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு கூட தெரியவில்லை. மணமக்கள் இருவரும் மேடைக்கு அடியில் புதைந்து கிடப்பதை வீடியோவில் காணலாம். மேடையின் ஒரு பகுதி மணமக்கள் மீது நேரடியாக விழுவதை வீடியோவில் தெளிவாகக் காணலாம்.


திருமண நாளில் நடந்த சம்பவ வீடியோவை இங்கே காணலாம்:



வீடியோ வைரல் ஆனது


இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் @iam.v.a.i.b.h.a.v என்ற பயனர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவுக்கு இதுவரை 6,00,000 -க்கும் மேற்பட்ட வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


பல சமூக ஊடக பயனர்கள் இந்த வீடியோவை பார்த்து தங்களின் கவலையை தெரிவித்து வருகின்றனர். ‘இந்த சம்பவம் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்!!’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். ‘இது செட் போட்டவரின் தவறு, அவருக்கு பணம் கொடுக்க கூடாது’ என மற்றொரு பயனர் எழுதி தனது கருத்தை தெரிவித்துள்ளார். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | மாமியாருடன் மாப்பிள்ளையின் குத்தாட்டம்... ஷாக்கில் மணமகள்.. நாமும்தான்: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ