பாம்பு வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் நாம் பல வித வீடியோக்களை தினமும் காண்கிறோம். இதில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெளியிடப்பட்ட உடனேயே வைரல் ஆகி விடுகின்றன. அதுவும் பாம்புகளின் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். பாம்புகளின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. பாம்புகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. பாம்புகளின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்பை நினைத்தாலே முதலில் வரும் வார்த்தை பயம் தான்! பொதுவாக பாம்புகளை கண்டால் யாரும் அந்த இடத்தில் நிற்பதில்லை. அங்கிருந்து ஓடி விடுவார்கள். அப்படிப்பட்ட பாம்புகளை மிக அருகில் பார்க்க இந்த சமூக வலைத்தள சமூக ஊடக வீடியோக்கள் உதவுகின்றன. பாம்புகள் தொடர்பான பல வித வித்தியாசமான நிகழ்வுகளை நாம் இவற்றில் காண்கிறோம். பாம்பின் அளவு சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, அவை மனிதனின் மனதில் கண்டிப்பாக அச்சத்தை ஏற்படுத்துகின்றன. 


மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ


சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் சமீபத்திய வீடியோவிலும் இதே போன்ற காட்சி காணப்படுகிறது. ஒரு நபர் 8-10 அடி நீளமுள்ள நாகப்பாம்புடன் விளையாடுவதை வீடியோவில் காணலாம். இங்கே ஒரு சிறிய தவறு அவருக்கு ஆபத்தானது. 


பாம்பின் வாலை ஆட்டி விளையாடிய நபர்
வைரலாகி வரும் இந்த வீடியோவின் தொடக்கத்தில், காட்டில் சுமார் 10 அடி நீளமுள்ள நாகப்பாம்பின் வாலை நபர் ஒருவர் எப்படி பிடிக்கிறார் என்பதை நீங்கள் காணலாம். நாகப்பாம்பும் அந்த நபரின் செயலால் மிகவும் கோபம் கொள்கிறது. அந்த பாம்பு அந்த நபரை பலமுறை கடிக்க முயன்றும் தோல்வியிலேயே முடிந்தது. அதேபோல் அந்த நபர் நாகப்பாம்பை மீண்டும் மீண்டும் சீண்டுவதைக் காணலாம். 


பாம்பின் வாலை வைத்து விளையாடும் நபரை இந்த வீடியோவில் காணலாம்: 


 



 


அடுத்து, அந்த நபர் எப்படி பயமின்றி நாகப்பாம்பின் வாலைப் பிடித்து மெதுவாக நகர்கிறார் என்பதை நீங்கள் காணலாம். அதன்படி அந்த நபரின் விழி பாம்பின் மீதே இருப்பதையும் காணலாம். மேலும் நபரின் செயலால் கடுப்பான பாம்பு அவரை தாக்கத் முயற்சிக்கிறது. 


இந்த நிலையில் தற்போது வீடியோ இதுவரை மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் இதற்கு பல வித ரியாக்‌ஷன்களை அளித்துள்ளனர். அத்துடன் இந்த வைரல் வீடியோ earthpix என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.


மேலும் படிக்க | பாம்புக்கும் நாய்க்கும் செம சண்டை, ஜெயிச்சது யாரு? அங்தான் ஒரு ட்விஸ்ட்: வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ