இன்றைய வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் தினமும் பலவிதமான வீடியோக்கள் வைரலாகி வருவதை நாம் காணலாம். சிலவற்றை உண்மையாக இருக்கும் அதே சமயம் சிலவற்றை போலியாக இருக்கக்கூடும். அதேபோல் சில வீடியோக்கள் வேடிக்கையான காணொளிகளாகவும், சிலவற்றை அதிர்ச்சியூட்டும் காட்சிகளாகவும் காணப்படுகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த வீடியோவில், இரவு இருளில் சாலையில் தென்படும் காட்சி உங்களின் நெஞ்சத்தை அதிர்ச்சியடையச் செய்யக்கூடும். அவ்வளவு பயங்கரமாக இருக்கிறது இந்த வீடியோ. அதேபோல் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெறிச்சோடிய சாலையில் பயங்கரமான காட்சி
சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், இரவு இருளில், சாலையில் இரண்டு வாகனங்கள் தங்கள் இலக்கை நோக்கி செல்வதை நாம் காணலாம். அப்போது இரு வழி காட்டை நோக்கி செல்கிறது. அப்போது திடீரென்று, வெள்ளை நிற ஆடை அணிந்த ஒரு பெண் முன்னால் செல்லும் நீல நிற காரின் மேல் அமர்ந்திருப்பதைக் காணலாம். இந்த வீடியோவை பார்க்கும் போது திகில் படம் போல தெரிகிறது. இந்த வீடியோவில், காரின் மீது 'பேய்' அமர்ந்திருப்பது போல் தான் தெரிகிறது. அதன் பின்னர் அந்த பேய் பின்னால் வந்த காரின் மீது பறந்து ஓடி காரில் அமர்கிறது.


மேலும் படிக்க | கொஞ்சமும் விவரமில்லாமல் பாம்பிடம் இப்படி செய்யலாமா? நடந்து இதுதான் - வைரல் வீடியோ


சினிமா காட்சி போல் தெரிகிறது
வீடியோவில் காணும் காட்சி ஒரு திகில் படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இருப்பினும், இந்த வீடியோ ஒரு சேட்டையின் ஒரு பகுதியாகத் தெரிகிறது. அதன் உண்மைத்தன்மையை பற்றி இன்னும் சரியாக தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


காரின் மீது பேய் ஏறி பயணம் செய்யும் வீடியோவை இங்கே காணுங்கள்:



இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வைரல் வீடியோ harazachvfx என்கிற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோ ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். அதன்படி இந்த வீடியோவுக்கு ஒரு பயனர் 'வீடியோவைப் பார்த்து பயப்படவில்லை என்றால் லைக் ஒன்றை தாருங்கள்' என்று எழுதினார். மற்றொரு பயனர், 'கவலைப்படாதே, அது உண்மையான பேய் இல்லை' என்று எழுதினார். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)


மேலும் படிக்க | ஐயகோ மாம்பழ ஆம்லெட் ஜோடியாக வந்த பீர் ஆம்லெட்: கதிகலங்கும் இன்ஸ்டாவைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ