வெறித்தனமான சண்டை..ராட்சத மலைப்பாம்பை பதம் பார்த்த காட்டு ராஜா:திக் திக் வீடியோ
தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டு மிரட்டலாக உள்ளது. இந்த வீடியோ மலைப்பாம்பு தொடர்புடையது, இதில் ஒரு ராட்சத மலைப்பாம்பு, எப்படி காட்டு ராஜாக்களான சிங்கத்திற்கு இரையாகிறது என்பதை நாம் காண முடிகிறது.
ராட்சத மலைப்பாம் vs சிங்கத்தின் வைரல் வீடியோ: ராட்சத மலைப்பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து முடியாக சில விஷயங்களையும், சில பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். அதன்படி இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, அதேபோல் சில சமயம் சோகத்தையும் தருகின்றன. அதிலும் விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
அந்தவகையில் சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஆனால், தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டு மிரட்டலாக உள்ளது. இந்த வீடியோ மலைப்பாம்பு தொடர்புடையது, இதில் ஒரு ராட்சத மலைப்பாம்பு, எப்படி காட்டு ராஜாக்களான சிங்கத்திற்கு இரையாகிறது என்பதை நாம் காண முடிகிறது.
இந்த நிலையில் தற்போது வைரலாகி வரும் திகிலான வீடியோவில், அடர்ந்த காட்டில் ராட்சத மலைப்பாம்பு ஒன்று தனது இரையை தேடி அலைகிறது, அப்போது அங்கிருந்த ஒரு முதலையை அந்த ராட்சத மலைப்பாம்பு முறுக்கி வேட்டையாடி விழுங்குகிறது. மறுபுறம் பசியில் அங்கும் இங்கும் அலைந்தது திரிந்த இரண்டு சிங்கங்கள் ராட்சத மலைப்பாம்பை கண்டு வேட்டையாட முடிவு செய்கிறது. அப்போது மலைப்பாம்பு மற்றும் சிங்கம் இடையே கடுமையான சண்டை நடக்கிறது. இதில் முதலில் அந்த மலைப்பாம்பு சிங்கத்தை தன் பிடியில் சிக்க வைக்கிறது, ஆனால் இறுதியில் சற்று மாறாக அந்த சிங்கம் தனது முழு பலத்துடன் அந்த ராட்சத மலைப்பாம்பை வீழ்த்தி தனது இரையாக மாற்றிக் கொள்கிறது. இந்த வீடியோ முழுமையாக நீங்கள் கண்டால் கட்டாயம் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள்.
திகிலூட்டும் வீடியோவை இங்கே காணுங்கள்:
கதிகலங்க வைக்கும் இந்த வீடியோ SKY Animal என்கிற யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
பொதுவாக மலைப்பாம்பு நச்சுத்தன்மையற்ற பாம்புகள் பிரிவிலுள்ள பருமன்-மிகுந்த பாம்பு வகை ஆகும். இவை பெரும்பாலும் தன் இரையை நெரித்துக் கொன்று அதன் பிறகு அவற்றை உண்ணும். இவை மந்தமாக, மெதுவாக நகர்வது வழக்கம் கொண்டவை. மறைந்திருந்து அதிரடியாக தன் உணவை வேட்டையாடக்கூடியது. பிற பாம்புகள் போல வளைந்து வளைந்து நகராமல் நேராக நகரக்கூடியவை. இவைற்றின் உணவு பாலூட்டிகள், பறவைகள் போன்றவை முதன்மையானவையாகும். இரையை திடீர் என தாக்கிப் பிடித்து ஒன்று அல்லது இரண்டு சுற்றுசுற்றிவளைத்து இரையை மூச்சு விட இயலாமல் செய்து கொல்கிறது. பின்னர் முதலில் தலையில் இருந்து விழுங்குகிறது. பெரிய உணவை சாப்பிட்ட பிறகு மந்தமாக பல நாட்கள் அல்லது பல வாரங்கள் செரிமானத்துக்கு ஓய்வெடுத்துக்கொள்ளும்.
(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | அனகோண்டாவுடன் நேருக்கு நேர் வந்த நபர், பதற வைக்கும் வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ