Viral Video: புத்தகப் பையில் கருநாகம்... அதிர்ச்சியில் உறைந்த மாணவி!
பள்ளி மாணவியின் பையில் பயங்கரமான விஷப்பாம்பு இருந்தால் எப்படி இருக்கும்.. இந்த அசாதாரண நிகழ்வு மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்த நிலையில், இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாம்பு என்றால் படையே நடுங்கும். அதிலும் கருநாகம் அல்லது ராஜ நாகம் என்றால் கேட்கவே வேண்டாம். எனினும் பாம்பு வீடியோக்கள் தான் இணையத்தில், அதிக அளவு வைரலாகின்றன. பாம்பு வீடியோக்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம். அந்த வகையில், தற்போது கருநாகம் ஒன்றின் மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டத்தில் உள்ள படோனி பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பள்ளி மாணவியின் பைக்குள் சுருண்டு கிடந்த ஆபத்தான பாம்பு தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம். இந்த சம்பவத்தின் வீடியோவை கரண் வசிஷ்டா என்ற நபர் தனது ட்விட்டர் பயனாளி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டத்தில் உள்ள படோனி பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது புத்தக பையில் பெரிய பாம்பு ஒன்று இருப்பதாக, உமா ராஜக் என்ற 10ம் வகுப்பு மாணவி கூறியதை அடுத்து, ஆசிரியர் பையை சோதித்தார். இந்த சம்பவம் முழுவதுமாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வீடியோ பகிரப்பட்டது. அந்த வீடியோவில் புத்தக பையை திறந்து ஆசியர் பையை சோதிப்பதையும், அதனை தலை கீழாக கவிழ்த்து, ஆட்டுவதையும் காணலாம்.
மேலும் படிக்க | நாகப்பாம்பின் தலையை வெட்டி நாகமணியை எடுத்த நபர்: பதற வைக்கும் வைரல் வீடியோ
வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:
காலையில் பள்ளிக்கு வந்த பிறகு, தனது பையில் ஏதோ நெளிவதாக ஆசிரியர்களிடம் மாணவி கூறியதாக கூறப்படுகிறது. பின்னர் ஆசிரியர்கள் பாம்பு பைக்குள் சிக்கியிருப்பதை கண்டனர். பெரிய பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை வீடியோவில் காணலாம். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என வசிஷ்டரின் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Viral Video: அம்பை போல பாயும் சிறுத்தையிடம் சிக்கி சின்னாபின்னமான முதலை!
மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ