Viral Video: ராஜநாகத்துடன் ஒரு உல்லாச நடனம் ஆடும் அதிசய இளைஞர்!

நாகப்பாம்பே மிகவும் ஆபத்தானது தான். அதிலும் கருநாகம், ராஜ நாகம் போன்றவற்றின் பெயரைக் கேட்டாலே பலருக்கு அச்சம் மனதில் புகுந்து விடும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 28, 2022, 02:35 PM IST
  • நாகப்பாம்பே மிகவும் ஆபத்தானது தான்.
  • சமூக ஊடக உலகம் ஆச்சரியங்களை அள்ளிக் கொடுக்கிறது.
  • கருநாகம், ராஜ நாகம் போன்றவற்றின் பெயரைக் கேட்டாலே பலருக்கு அச்சம் மனதில் புகுந்து விடும்.
Viral Video: ராஜநாகத்துடன் ஒரு உல்லாச நடனம் ஆடும் அதிசய இளைஞர்! title=

சமூக ஊடக உலகம் ஆச்சரியங்களை அள்ளிக் கொடுக்கிறது. அதிலும் விலங்குகளின் சண்டை, விலங்குகளின் வேட்டை என்றால் அந்த வீடியோ எளிதில் வைரலாகி விடும். பாம்பின் வீடியோ என்றால் கேட்கவே வேண்டாம். அதற்கென்று தனி ரசிக பட்டாளமே உண்டு எனலாம். பாம்புகள் மற்றும் மலைப்பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. அந்த வகையில் இப்போது வைரலாகி வரும் ராஜ நாகம் ஒன்றின் வீடியோ, மிகவும் வைரலாகி வருகிறது. இந்த காணொளி மிகவும் வித்தியாசமானது. இந்த வீடியோவில் ஆபத்தான ராஜ ராகத்துடன் நடனமாடும் ஒருவரைக் காணலாம். 

நாகப்பாம்பே மிகவும் ஆபத்தானது தான். அதிலும் கருநாகம், ராஜ நாகம் போன்றவற்றின் பெயரைக் கேட்டாலே பலருக்கு அச்சம் மனதில் புகுந்து விடும். ஆனால், இந்த காணொளியில் நீங்கள் காணும் காட்சி உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விடும். இதில் ஒரு சிறுவன் சுமார் 10 அடி நீளமுள்ள ராஜ நாகப்பாம்புடன் உல்லாசமாக நடனம் ஆடுவதை நீங்கள் காண்பீர்கள்.

மேலும் படிக்க | நாகப்பாம்பின் தலையை வெட்டி நாகமணியை எடுத்த நபர்: பதற வைக்கும் வைரல் வீடியோ

ராஜநகத்துடன் நடனமாடும் வீடியோ:

மேலும் படிக்க | Viral Video: கேமராவில் சிக்கிய அற்புத காட்சி; நாகமணியை பாதுகாக்கும் ராஜநாகம்!

சில வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், 10 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை காணலாம். கொடிய விஷம் கொண்ட ராஜ நாகத்துடன் ஒரு சிறுவனும் இருக்கிறான். அவன் நாகப்பாம்பைக் கண்டு சிறிதும் பயப்படாமல், அதற்கு பக்கத்தில் படுத்துக் கொண்டு ஆடத் தொடங்குகிறான். பின் அதனை தனது கைகளில் தூக்கிக் கொண்டு ஆடுகிறான். , அதை பார்க்கும் போதே, நமது மனம் பதறுகிறது. 

மேலும் படிக்க | Viral Video: அம்பை போல பாயும் சிறுத்தையிடம் சிக்கி சின்னாபின்னமான முதலை!

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News