திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெறவேண்டுமாய் பிரபல இயக்குநர் வாழ்த்து தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் திரையுலகினர் பலரும் தாங்கள் சார்ந்த அரசியல் கட்சிகளுக்கு பிரசாரம் செய்து வருகின்றனர்.


இந்நிலையில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியம் வெற்றி பெற தமிழ்சினிமாவின் பிரபல இயக்குநர் சீனு ராமசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதுகுறித்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது... “கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர் பெண்ணுரிமையாளர், பழகுவதற்கு எளிமையான மனுசி , தென்சென்னை மாவட்ட நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பெருமைமிகு தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று குறிபிட்டுள்ளார்.