சென்னை புயலில் மனிதர்கள் உள்ளே! முதலைகள் வெளியே... மிக்ஜாம் சூறாவளி வீடியோ வைரல்
Crocodile Roaming On Road: சென்னையையே புரட்டிப் போட்ட மிக்ஜாம் சூறாவளிப் புயலில் சிக்கி தவிக்கும் மக்களை பீதியடையச் செய்யும் முதலை வாக்கிங் வீடியோ வைரல்
மிக்ஜாம் புயல் வைரல் வீடியோ: விடிய விடிய கொட்டித் தீர்த்து வரும் மழைக்கு நடுவே, பெருங்களத்தூர் சாலையில் அமைந்துள்ள வேலம்மாள் பள்ளிக்கூடத்திற்கு அருகில் முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சி வெளியாகி வைரலாகிறது. இந்த வீடியோ டிவிட்டர் எனப்படும் எக்ஸ் வலைதளம் உட்பட பல சமூக ஊடகங்களில் பலராலும் பார்க்கப்படுகிறது. பார்ப்பவர்கள், இந்த வீடியோவை பகிர்வதால், மேலும் பலரும் பார்த்து வைரலாகிறது.
இந்த வீடியோ குறித்து பலர் ட்வீட் செய்து வருகின்றனர்.சென்னையில் உள்ள பல நீர்நிலைகளில் முதலைகள் உள்ளன. கூச்ச சுபாவமுள்ள முதலைகள் மனித தொடர்பைத் தவிர்க்கின்றன. ஆனால், மிக்ஜாம் சூறாவளியினால் (Michaung Cyclone) சென்னையில் கொட்டி வரும் கனமழையினால், சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சாலைகளில் மனிதர்கள் நடமாட்டம் குறைந்திருக்கும் இந்த வேளையில் விலங்குகளும், ஊர்ந்து செல்லும் உயிரினங்களும் வெளியே வந்துவிடுகின்றன. அந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வைரலாகும் முதலை வீடியோ
இந்த வீடியோவை, எக்ஸ் வலைதளத்தில், சுப்ரியா சாகூ ஐ.ஏ.எஸ், @supriyasahuias என்ற பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நீர்நிலைகளில் இருந்து சாலைகளில் ஓடும் நீர், மக்களுக்கு பல்வேறுவிதமான இடைஞ்சல்களை ஏற்படுத்துகிறது என்றால், விலங்குகளுக்கும் சிக்கலை ஏற்படுத்துகிறது.
பொங்கி வழியும் நீரில் இருந்து வெளியே வந்த முதலை சாலையில் ஊர்ந்து நகர்ந்து செல்வதை (Crocodile Roaming On Road), காரில் செல்லும் ஒருவர் படம் பிடித்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
எனவே, மக்கள் தயவுசெய்து நீர்நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார். இதுபோன்ற விலங்குகள் உலாவுவதைக் கண்டால், பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பீதியடைய தேவையில்லை. வனவிலங்கு பிரிவு உஷார்படுத்தப்பட்டு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
திருவெற்றியூர், மணலி, எண்ணூர், ராயபுரம் என சென்னை புறநகர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்து வரும் மழையினால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஆவடியில் அதிகபட்சமாக 28 செமீ மழை பதிவாகி உள்ளது. தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு 110 கி.மீ., தூரத்தில் புயல் நிலைகொண்டுள்ளதாகவும், இன்று முற்பகல் 11.30 மணிக்குள் தீவிர புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | எப்படி எல்லாம் டீ போடக்கூடாது? வைரலாகும் ‘மோசமான டீ மாஸ்டர்’ கத்துக்குட்டி வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ