இந்தியாவில், தேநீர் மீதான காதல் வெறும் ஊக்கம் கொடுக்கும் பானம் மட்டுமல்ல. இது ஒரு கலாச்சார நிகழ்வு மற்றும் அன்றாட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். ஒரு பானத்தை விட, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது தேநீர். இந்த உற்சாக பானத்தில் நறுமணத்தை சேர்க்க மசாலாப் பொருட்களும் சேர்க்கப்பட்டு, ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்.
பசியை அடக்க மட்டுமல்ல, பசியை தள்ளிப்போடவும் ஆறுதல் தரும் அரவணைப்பாக இருக்கும் டீ, பரபரப்பான நாட்களின் மத்தியில் ஓய்வு அளிக்கும் மாமருந்தாக இருக்கிறது. சாலையோரக் கடைகளில் இருந்து ஆடம்பரமான வீடுகள் வரை, தேநீர் என்பது, அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக செயல்படுகிறது.
ஒருவருடனான உரையாடல்களை வளர்க்கிறது, இணைப்புகளை உருவாக்குகிறது மற்றும் சமூக எல்லைகளைத் தாண்டிய பகிர்தல் அனுபவத்தை உருவாக்குகிறது.
மேலும் படிக்க | ஓடும் ரயிலில் ஓயாமல் ஆடிய பெண்.. வெச்சி செஞ்ச நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோ
இருப்பினும், சமூக ஊடக தளங்களில் தற்போது வைரலாகும் ஒரு தேநீர் தயாரிக்கும் வீடியோ சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு பிரியமான பானத்தை தயாரிக்க ஒரு வித்தியாசமான அணுகுமுறையை காட்டும் விசித்திரமான வீடியோ, இணையத்தில் வைரலாகிறது.
இணையதளத்தில் பகிரப்பட்ட வழக்கத்திற்கு மாறாக தேநீர் தயாரிக்கும் வீடியோவை பாருங்கள்... இப்படி ஒரு டீயை குடிச்சதுண்டா?
I strongly condemn this new way to make chai.
Should we file a petition in SC to stop this nonsense? pic.twitter.com/jy4BMgR472— Monica Jasuja (@jasuja) November 25, 2023
இப்போது வைரலாகும் காட்சிகளில், அந்த நபர் ஒரு பாத்திரத்தில் தேயிலை இலைகளை சர்க்கரையுடன் சேர்த்து வறுத்து, அசாதாரணமான கலவையை உருவாக்கினார். நபர் பின்னர் சிறிது ஏலக்காயைச் சேர்த்து, பின்னர் தண்ணீரைச் சேர்க்கிறார், அது நன்றாக கொதிக்க வைக்கப்படுகிறது. இந்த வழக்கத்திற்கு மாறான டிகாசன் தயாரிப்பைத் தொடர்ந்து, பால் சேர்க்கப்பட்டு, மீண்டும் கொதிக்க வைக்கப்பட்டது.
இந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் பரவியதால், தேநீர் வகைகளைப் போலவே எதிர்வினைகளும் விதவிதமாய் இருந்தன. நெட்டிசன்களால் இந்த வித்தியாசமான டீ தயாரிப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த எதிர்வினைகள், தேநீரை அவமானப்படுத்திவிட்டது போல வெளிப்படுகின்றன.
தேநீர் தயாரிக்கும் புனிதமான கலையின் மீதான தாக்குதல் என்று ஒருவர் சொன்னால், மற்றொருவரோ "சாய்-சுப்ஜி" என்று வித்தியாசமான பெயர் கொடுத்தார்.
இந்த விர்ச்சுவல் புயலின் மத்தியில், சர்ச்சைக்குரிய வீடியோவின் பின்னணியில் இருந்த தேநீர் ஆர்வலருக்கு கிடைத்த வியூஸ், அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | பொக்கை வாய் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டும் இளம்பெண்! என்ன கொடுமை சார் இது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ