தாய் தனது மகனுக்கு தவறுதலாக பெரிய இழப்பை ஏற்படுத்தியதால், பாதிக்கப்பட்ட மகன் மன உளைச்சலுக்கு ஆளான சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுய். மகனின் ரூ.3000 கோடியை அந்த தாயின் கவனக்குறைவினால் கை நழுவிப் போனது தான் வேதனையான விஷயம். 'ரெட்டிட்' (Reddit) என்ற சமூக வலைதளத்தில், பாதிக்கப்பட்ட ந்த நபர் தனது ஆடையாளத்தை மறைத்து தனது வாழ்க்கையின் பகீர் சம்பவத்தை எடுத்துக் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அம்மா செய்த தவறால் 3000 கோடி கை விட்டு போனது 
அம்மாவின் சிறு தவறால் 3000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு, தன் வாழ்க்கையே நாசமாகிவிட்டதாக அந்த நபர் கூறினார். இவர் கடந்த 2010ம் ஆண்டு 10 ஆயிரம் பிட்காயின்களை 6 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியதாக டெய்லி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது. அப்போது அந்த நபர் கல்லூரியில் படித்து வந்தார். இருப்பினும், கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, வேலைக்குச் சேர்ந்த அவர், கிரிப்டோகரன்சி வாங்கியதை மறந்துவிட்டார்.


இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளாக கிரிப்டோகரன்சி (Cryptocurrency) மார்க்கெட் பற்றி கேள்விப்பட்டதும், வாங்கிய பிட்காயின் நினைவுக்கு வந்தது.பின், வீட்டிற்கு சென்ற பின், 10 ஆயிரம் பிட்காயின் விவரங்களை வைத்து, லேப்டாப்பை தேட துவங்கினார். அந்த லேப்டாப்பை நீண்ட நேரம் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து தனது தாயிடம் லேப்டாப் பற்றி கேட்டுள்ளார்.


ALSO READ | cryptocurrency: ஃப்ளிப்கார்ட்டில் டிசம்பர் 13 முதல் கிரிப்டோகரன்சியில் இந்தப் பொருளை வாங்கலாம்


லேப்டாப்பை குப்பையில் வீசி விட்டதாக அம்மா சொன்னதும் அந்த நபருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை அந்த நபர் தனது தாய் மடிக்கணினியை குப்பையில் வீசியதாக கூறினார். மகனைக் கேட்காமல் மடிக்கணினியைக் குப்பையில் வீசியிருக்கிறாள் தாய். இந்த சம்பவம் அந்த நபரின் வாழ்க்கையையே நாசமாக்கியது. ஏனெனில் இன்றைய நிலவரப்படி 10 ஆயிரம் பிட்காயின்களின் விலை 300 மில்லியன் பவுண்டுகள் அதாவது சுமார் 3000 கோடியாக மாறியிருந்தது. இதனால் அந்த நபருக்கு ரூ.3000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த சம்பவத்தின் பின்னர் தான் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக அந்த நபர் தெரிவித்தார். இப்போது மன உளைச்சலில் இருந்து வெளியே வந்தாலும், இன்றும் கூட இவ்வளவு பெரிய தொகை தன் கையை விட்டுப் போய்விட்டதே என்று வருந்துகிறார். பிட்காயின் ஒரு மெய்நிகர் நாணயம் என்பதை நினைவில் கொள்ளவும். பிட்காயின் 2009 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பிட்காயின் என்பது ஒரு வகையான கிரிப்டோகரன்சி, இன்றைய காலகட்டத்தில் 1 பிட்காயினின் விலை லட்சங்களில் உள்ளது.


ALSO READ | Cryptocurrency: கிரிப்டோகரன்ஸி குறித்து பிரதமர் மோடி முக்கிய கூட்டம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR