மாணவியின் முடியை பிடித்து தரதரவென இழுத்துச் செல்லும் பெண் போலீசார்! அதிர்ச்சி வீடியோ வைரல்!
Aggressive Tactics By Police: போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது தெலுங்கானா காவல்துறையின் அட்டூழியத்தின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... மனித உரிமையை மீறும் வீடியோ வைரல்!
போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது தெலுங்கானா காவல்துறையின் அட்டூழியத்தின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசமான தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது.. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த பிஆர்எஸ் எம்எல்சி கே.கவிதா, சம்பந்தப்பட்டவர்கள் மீது தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
போராட்டம் நடத்திய மாணவர் மீது தெலுங்கானா காவல்துறையினரின் கொடூர வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. நெஞ்சை பதைபதைக்கும் இந்த வைரல் வீடியோவில், ஓடிக் கொண்டிருக்கும் மாணவியை இரு சக்கர வாகனத்தில் துரத்தும் மகளிர் காவலர்கள் இருவரின் கோபத்தை பார்க்க முடிகிறது.
வைரலாகும் வீடியோ...
ஜனவரி 24 புதன்கிழமையன்று, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியின் முடியைப் பிடித்து இழுத்துச் செல்லும் தெலுங்கானா காவலர்களின் வீடியோ, காவல்துறையின் அட்டூழியத்தின் உச்சம் என்று பரவலான கண்டனத்தை பெற்றுத் தந்துள்ளது.
ராஜேந்திரநகரில் உள்ள பேராசிரியர் ஜெயசங்கர் தெலுங்கானா மாநில வேளாண் பல்கலைக்கழகத்தில் (PJTSAU) இந்த சம்பவம் நடந்துள்ளது. காவலர்களின் இந்த மோசமான செயலால் பாதிக்கப்பட்ட மாணவியின் கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
PJTSAU க்கு சொந்தமான நிலத்தை புதிய உயர் நீதிமன்ற வளாகத்தைக் கட்டுவதற்கு ஒதுக்குவதற்கான மாநில அரசின் சமீபத்திய முடிவை எதிர்த்து ABVP-ஐச் சேர்ந்த மாணவர்கள் போராடி வருகின்றனர். அப்போது நடைபெற்ற போலீசாரின் அராஜக செயல் இது.
இந்த சம்பவத்தை கண்டித்த பிஆர்எஸ் எம்எல்சி கே கவிதா, தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) சம்பந்தப்பட்டவர்கள் மீது "விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கை" எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"தெலுங்கானா காவல்துறை சம்பந்தப்பட்ட சமீபத்திய சம்பவம் ஆழ்ந்த கவலைக்குரியது மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அமைதியாக போராடும் போராட்டக்காரரை இழுத்துச் செல்வதும், மோசமான நடத்தையை கட்டவிழ்த்து விடுவதும், காவல்துறையின் இத்தகைய ஆக்கிரமிப்பு தந்திரங்கள் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. இந்த ஆணவமான நடத்தைக்கு தெலுங்கானா காவல்துறை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மனித உரிமைகள் ஆணையம் சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். போலீசாரின் இதுபோன்ற செயல்களை அனுமதிக்கமுடியாது. தவறு செய்தவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக கண்டிக்கப்பட வேண்டும்" என்று பிஆர்எஸ் எம்எல்சி கே கவிதா தனது எக்ஸ் வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.
போலீசாரின் இந்த மோசமான தாக்குதல் குறித்து காங்கிரஸ் அரசாங்கத்தை சாடிய ஆந்திர பாஜக துணைத் தலைவர் விஷ்ணு வர்தன் ரெட்டி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்.
“தெலுங்கானாவின் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகப் போராடிய ஏபிவிபி மாணவியை, காவல்துறையினர் முடியை பிடித்து இழுத்து அடிக்கின்ரனர். இதுதான் உங்களுடைய அன்பான வழிமுறையா Mr @RahulGandhi? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ