Viral Love Video Of Lions: சமூக ஊடகங்களில் பார்த்து ரசிக்கப்படும் வீடியோக்களில் சிங்கங்களின் வீடியோவுக்கு தனி மவுசு உண்டு. நமது வாழ்க்கையுடன் நீக்கமற கலந்து விட்ட இணையதளங்கள்  நமது வாழ்க்கையை பெரிதும் மாற்றிவிட்டன, பற்பல அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் நாம் பார்க்கவே முடியாத விஷயங்களையும், பார்த்தால் அதற்கு பின் உயிருடனே இருக்க முடியாத விஷயங்களையும் தெரிந்துக் கொள்வதையும், பார்ப்பதையும் சாத்தியமாக்கியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் வீடியோ 


இணையத்தில் வினோதமான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு பலராலும் ரசித்து பார்க்கப்படுகின்றன. அதிலும் விலங்குகளின் கசமுசா காதல், மோதல், கொஞ்சல், பிடிவாதம் என அவற்றின் மனோபாவங்களை வெளிக்காட்டும் வீடியோக்கள்  பதிவிட்ட உடனே வைரல் வீடியோக்கள் என்ற அந்தஸ்தை ப்பெற்றுவிடுகின்றன.  


மேலும் படிக்க | பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய பாகிஸ்தான் பெண்... வாயை பிளக்கும் நெட்டிசன்கள்! 


மேலும் படிக்க | Tiger Video: சுருண்டு கிடக்கும் புலியை சீண்டினால் என்னவாகும்! வைரலாகும் புலிவேட்டை வீடியோ


விலங்குகளின் காதலையும், ஊடட்லையும் பார்த்து மகிழ வாய்ப்புகளைக் கொடுக்கும் சமூக ஊடகங்களில், வித்தியாசமான வீடியோக்கள் லைக்குகளை அள்ளுகின்றன. இவை விலங்குகளின் வேட்டை வீடியோக்களா அல்லது காதல் வேட்டையா அல்லது மனிதர்களின் மனதைக் கொள்ளைக் கொள்ளும் காதல் வீடியோக்களா? எதுவாய் இருந்தால் என்ன? வைரலாகும் இந்த வீடியோவைப் பார்த்தால் உங்களுக்கும் பிடிக்கும்.



சிங்கங்களின் காதல் வீடியோ


இந்த வீடியோவைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? ஆனால், சிங்கங்களைப் பற்றிய இந்தத் தகவல்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள். சிங்கங்கள் மிகவும் சிக்கலான விலங்குகள், ஆனால், காதலில் கெட்டிக்கார விலங்கு என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.


ஆண் சிங்கம், பெண் சிங்கத்தின் தலையை தேய்த்து, நக்கி தனது அன்பையும் காதலையும் வெளிப்படுத்தும். ஒரு சிங்கம், தனது இணை சிங்கத்தின் கன்னத்தின் கீழ் வளைத்து, வளைந்து முத்தமிட்டுக் கொண்டும், தலையை தேய்த்துக் கொண்டும் உணர்ச்சியை தூண்டுமாம்!  


மேலும் படிக்க | நெல்லிக்காயாய் சிதறும் பாம்புகள்! பார்த்தால் வயிற்றைப் பிரட்டும் பாம்பு வீடியோ வைரல்


அதிலும் பெண் சிங்கங்களின் உணர்ச்சியை தூண்டுவதும், அவற்றை திருப்திபடுத்துவம் கடினம் என்று சொல்லும் ஒரு கட்டுரை மிகவும் ஆச்சரியத்தையும் அதிர்சியையும் அளிக்கிறது. Scientific american.com என்ற வலைதள பக்கத்தில், Even Lions Like To cuddle என்ற கட்டுரையில் சிங்கங்கள் தோராயமாக ஒவ்வொரு 15 முதல் 20 நிமிடங்களுக்கும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு என தொடர்ச்சியாக 200 முதல் 300 முறை இனச்சேர்க்கை செய்யும் என்ற தகவல், காட்டுக்கு மட்டுமா ராஜா, நான் காதலுக்கும் காமத்துக்கும் ராஜா என்று சிங்கம் சொல்வதைப் போல தோன்றுகிறது.


மேலும் படிக்க | 'சீக்கிரம்டா..வந்துட போறாரு': ஆப்பிள் திருடும் கில்லாடி குரங்குகள், சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ