விநாயகர் சிலையை கரைக்க நவீன மிஷின்!! வைரல் வீடியோ
Ganesh Chaturthi 2024 Vinayagar Dissolve Viral Video : விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன், அனைவருமே வீட்டில் வைத்த விநாயகரை கடலில் அல்லது ஆற்றில் கரைப்பது வழக்கம். இங்கு வித்தியாசமாக விநாயகர் கரைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Ganesh Chaturthi 2024 Vinayagar Dissolve Viral Video : கணேஷ் சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி என, இந்த பண்டிகைக்கு பல்வேறு பெயர்கள் உண்டு. எந்த விஷயங்களை தொடங்குவதற்கு முன்னரும் பலர் வணங்கும் கடவுளாக இருக்கிறார், விநாயகர். இவ்வளவு ஏன்? பலர் தங்களின் நோட்டு புத்தகங்களிலும், பரீட்சை ஆரம்பிக்கும் முன்பாகவும், கணக்கு எழுதுவதற்கு முன்பாகவும், திருமணத்திற்கு பத்திரிகை எழுதுவதற்கு முன்பாகவும் பிள்ளையார் சுழி போட்டுதான் அனைத்தையும் ஆரம்பிப்பர். எங்காவது சுற்றுலா செல்வதற்கு முன்பு கூட, விநாயகர் கோவிலுக்கு முன்பாக நிறுத்தி ஒரு தேங்காயை உடைத்துவிட்டு செல்வர். இப்படி அனைத்திற்கும் முழு முதற்கடவுளாக பார்க்கப்படும் விநாயகருக்காக கொண்டாடப்படும் பண்டிகைதான், விநாயகர் சதுர்த்தி.
மேலும் படிக்க | முட்டையை அபேஸ் செய்த சிறுமியை... போட்டுத் தாக்கிய தாய் மயில்... வைரல் வீடியோ
விநாயகர் சதுர்த்தி 2024:
இந்த வருடத்திற்கான விநாயகர் சதுர்த்தி, கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்பட்டது. இந்திய அளவில் பெரும்பாலான இந்துக்களால் கொண்டாடப்பட்ட இந்த பண்டிகை பல வண்ண விநாயகர்களாலும், கோலங்களாலும், விதவிதமான பலகாரங்களாலும் அலங்கரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.
பொதுவாக விநாயகர் சதுர்த்தி என்றால், அனைவரது இல்லங்களிலும், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி வந்து வைத்து அதற்கென்று குட்டியாக ஒரு குடை, விநாயகருக்கு பிடித்த பழங்கள், கொழுக்கட்டை உள்ளிட்டவற்றை செய்து படைப்பர். இந்த விநாயகர் சிலையை, 3 அல்லது 5 தினங்கள் கழித்து கடலில் கரைப்பது அனைவருக்கும் வழக்கம். இது இல்லங்களில் மட்டுமல்ல, தெருவுக்கு தெரு ஆளுயர விநாயகரை வாங்கி வைத்தும் அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைப்பர்.
வைரல் வீடியோ:
ஒரு ஊரில், விநாயகரை கைகளால் ஆற்றில் போட்டு கரைப்பதற்கு பதிலாக, அதற்கென்று தனியாக ஒரு ரேம்ப் மிஷினை வைத்து, அதில் வரிசையாக பிள்ளையார்களை அடுக்கி மெதுவாக சென்று, தொப்பென்று தண்ணீரில் விழும் வகையில் விநாயகரை கரைத்திருக்கின்றனர்.