முட்டையை அபேஸ் செய்த சிறுமியை... போட்டுத் தாக்கிய தாய் மயில்... வைரல் வீடியோ

இணையவாசிகளுக்கு விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் மீது தனி ஈர்ப்பு உள்ளது. மயில், கழுகு, கிளி போன்ற பறவைகள் மட்டுமல்லாது நாய், பூனை, யானை, பாம்பு, குரங்கு ஆகியவற்றின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் மிகவும் விரும்பி பார்க்கப்படுகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 9, 2024, 05:37 PM IST
  • இணையவாசிகளுக்கு விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் மீது தனி ஈர்ப்பு உள்ளது.
  • நம்மால் நம்ப முடியாத பல அரிய விஷயங்களை நாம் காண்கிறோம்.
  • மயில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
முட்டையை அபேஸ் செய்த சிறுமியை... போட்டுத் தாக்கிய தாய் மயில்... வைரல் வீடியோ

Viral Video of Peacock: சமூக ஊடக தளங்களில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன்  நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள  சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

Add Zee News as a Preferred Source

சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் பார்ப்பதற்கு அரிய, பிற உயிரினங்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகள் பறவைகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று காண முடியாத பல நிகழ்வுகளை சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் காண்கிறோம்.

இணையவாசிகளுக்கு விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் மீது தனி ஈர்ப்பு உள்ளது. மயில், கழுகு, கிளி போன்ற பறவைகள் மட்டுமல்லாது நாய், பூனை, யானை, பாம்பு, குரங்கு ஆகியவற்றின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் மிகவும் விரும்பி பார்க்கப்படுகின்றன. இவற்றில் நம்மால் நம்ப முடியாத பல அரிய விஷயங்களை நாம் காண்கிறோம்.

தாயன்புக்கு ஈடு இணை கிடையாது. அது மனிதர்களானாலும் சரி, மற்றும்  விலங்குகள் ஆனாலும் சரி, ஒரு தாய் தன் குழந்தைகள் மீது கொண்டிருக்கும் பாசத்தை அளவிட முடியாது. குழந்தையை ஒரு தாய் அக்கறையுடன் பார்த்துக்கொள்வது போலதான் விலங்குகளும் பறவைகளும் தங்கள் குட்டிகளையும் முட்டைகளையும் பாதுகாக்கின்றன.  அதை உறுதிபடுத்தும் வகையிலான மயில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி (Viral Video) வருகின்றது.

வைரலாகும் வீடியோவின் துவக்கத்தில் ஒரு மயில் மேடான ஒரு நிலப்பரப்பில் தனது முட்டைகளை அடை காத்தவாறு இருப்பதை காண முடிகின்றது. அதன் அருகில் சில முட்டைகள் இருப்பதையும் காணலாம். அப்போது அங்கு எங்கிருந்தோ வந்த ஒரு சிறுமி மயிலை பிடித்து தூர வீசி விட்டு மயிலின் முட்டைகளை மடமடவென எடுக்கத் தொடங்குகிறார். ஆனால், தாய் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா என்ன...

மேலும் படிக்க | பேய்க்கு பளார் என விழுந்த அடி, சிரிப்பு கேரண்டி - வைரல் வீடியோ

மயில் பெண்ணுக்கு கற்றுக்கொடுத்த பாடத்தை கீழே உள்ள வீடியோவில் காணலாம்: 

தாய் மயில் நேராக பறந்து வந்து சிறுமியை தாக்குகிறது. இதை சற்றும் எதிர்பாராத பெண், நிலை குலைந்து கீழே விழுகிறார். மயிலின் தாக்குதலால் கதி கலங்கிய சிறுமி முட்டைகளை அப்படியே போட்டுவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி விடுகிறார். சிறுமியை தாக்கி மயில் தனது முட்டைகள் திருடப்படாமல் காப்பாற்றிக் கொண்டது. 

இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். விலங்குகளின் இயல்பான வாழ்வில் சில மனிதர்கள் தனது சுயநலத்திற்கான குறுக்கிடுவது மிகவும் மோசமான செயல் என குறிப்பிட்டுள்ளனர். வாயில்லா ஜீவன்களான விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் இந்த பூமியில் வாழ நம்மைப் போலவே சம உரிமை உள்ளது என்பதை நாம் புரிந்துகொண்டு, அவர்களது வாழ்வில் இடையூறுகளை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | எதையோ விழுங்கி அவதிப்படும் நாகம்..! வைரலாகும் வீடியோ..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News