Viral Video In India: குழந்தைகள் சிறுவயதில் இருக்கும்போது பெற்றோர் சொல்லிக்கொடுக்கும் முதல் பாடமே... அடையாளம் தெரியாத நபர்களிடம் ஜாக்கிரதையாக இரு... என்பதுதான். யாரென்றே தெரியாத நபர்கள் உணவு கொடுத்தாலோ, அழைத்தாலோ முதலில் பெற்றோர் இடத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறுவார்கள். ஏனென்றால், யார் என்றே தெரியாத நபர்களால் குழந்தைகளுக்கு அதிகம் ஆபத்து ஏற்படுகிறது என்பதால் இதை அடிக்கடி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை இந்த குழந்தை தனது நினைவில் வைத்துக்கொண்டேதான் வளரும். பள்ளி, கல்லூரிக்குச் சென்ற பிறகும் யார் என தெரியாதவர்களை நெருங்கவும் அந்த குழந்தைகள் அச்சப்படும். இருந்தாலும், சிலரோ தைரியமாக என்ன பிரச்னை வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என அச்சமின்றி இருப்பார்கள். அதாவது, பெற்றோர் சிறுவயதில் சொல்லிக்கொடுத்த பாடத்தை ஞாபகத்தில் வைத்திருந்தாலும், தற்போது வளர்ந்துவிட்டதால் அதுகுறித்து சுயமாக முடிவெடுக்கவே பலரும் விரும்புவார்கள்.


பைக் திருட்டு


அப்படி அடையாளம் தெரியாத ஒரு நபரை நம்பிய ஒருவர் தனது பைக்கை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நிச்சயம் அவருக்கும் அவரின் பெற்றோர் சிறுவயதில் இதை சொல்லிக் கொடுத்திருப்பார்கள், ஆனால் அடையாளம் தெரியாத அந்த நபர் மேல் பாதிக்கப்பட்டவர் வைத்த நம்பிக்கை நொடியில் தவிடுபொடியானது. இதுகுறித்து வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தின் முழு விவரங்களையும் இங்கு காணலாம்.


மேலும் படிக்க | சூரிய கடவுளை பாதிப்பதாக கூறி சோலார் பேனல்கள் அடித்து உடைப்பு - வைரல் வீடியோ உண்மையா?


உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் அடையாளம் தெரியாத ஒரு சிறுமி, ஒருவரின் பைக்கை நூதன முறையில் திருடிச் சென்றுள்ளார். அந்த பெண் திருடிச் சென்ற வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, வாராணசியின் கபீர் நகரில், 'வழியில் உங்கள் ஸ்கூட்டி குறுக்கே நிற்கிறது... அதை நகர்த்த வேண்டும்' என பள்ளி சீருடை அணிந்து வந்த சிறுமி, பைக்கின் உரிமையாளரிடம் வந்து கேட்டுள்ளார். பள்ளி சீருடை அணிந்து வந்ததால், அந்த சிறுமியை நம்பி அவரும் சாவியை கொடுத்துள்ளார்.