திருட்டு தொடர்பான சம்பவங்களை நடத்த, திருடர்கள் வெவ்வேறு வழிகளைக் கடைப்பிடிக்கின்றனர். இதில் சிலவற்றில் வெற்றி பெற்றாலும் சிலவற்றில் கையும் களவுமாக பிடிபடுகிறார்கள். இது போன்ற ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இரவின் இருளில் திருடன் ஒரு கடையில் பொருட்களைத் திருடச் செல்வதைக் காணலாம். திறந்தவெளியைப் பார்த்து, குளிர்பான பாட்டிலைக் கையை வைத்து இழுக்க அந்த திருடன் முயற்ச்சிக்கிறான், ஆனால் கடைக்காரர் ஏற்கனவே திருடப்பட்டதாக சந்தேகிக்கிறார். அடுத்து என்ன நடந்தது என்று பார்த்தால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருடனைப் பிடிக்க கடைக்காரர் மாஸ் பிளானிங்க
வைரலாகி வரும் இந்த வீடியோவில், இருட்டில் திருடன் வந்து கடையில் கையை வைத்து குளிர்பான பாட்டிலை தூக்கி வருவதை நீங்கள் காண்பீர்கள். சந்தேகத்தின் காரணமாக கடைக்காரர் ஏற்கனவே தயார் நிலையில் இருந்ததால், அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரைப் பிடிக்க திட்டம் தீட்டினார். திருடன் கை வைத்தவுடன், கடைக்காரர் அவரை ரகசியமாகப் பிடிக்கிறார். சிறிது நேரம் கழித்து கடைக்காரரின் சக ஊழியரும் அங்கு வருகிறார்.


மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ


வீடியோவை இங்கே பார்க்கவும்



வீடியோவின் முடிவில் இருவரும் சேர்ந்து திருடனின் கையை இழுக்கத் தொடங்குவதை நீங்கள் காண்பீர்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன், டிரெண்ட் ஆகி வருகிறது. மேலும்  இந்த வீடியோ videonation.teb என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கமெண்ட் பாக்ஸில் பலவிதமான ரியாக்ஷன்களை கொடுத்து வருகின்றனர்.  மேலும் இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ